Wednesday, 4 August 2010

ஆடி-18

நான்..ஊருக்கு போறேன்..
தீவாளிக்கு பின் இப்பதான் போறேன்..
18க்கு போயி பல வருசமாச்சு..

பாவாடை தாவனியில்..
பவனி வரும் என் பசுங்கிளியை பார்க்கப்போறேன்..

கண் மூடி கடந்த வருடங்களை மென்றேன்..

சலசலக்கும்..காவேரி..
கல கலக்கும் தாவனிகூட்டம்..
அச்சாரம் போட ஆசையாய்..இளவட்ட கூட்டம்

என் வீட்டு காப்பு கயிறை
தாலியாய் நான் கட்ட..அதை நீ என் கையில் கட்ட
காவேரிதான் சாட்சி கரம் கோர்த்து நடந்த போது!

இதை பார்த்த என் வட்டம் ஒன்னு..
அடுத்த வீட்டு பொன்னுக்கு அச்சாரம் போட..
ஆயி போச்சே பெரும் கலாட்டா..நினைக்கையிலே கண்ணுக்குள் சிரிப்பு

நீ கட்டும் கயிறு..இத்து போகும் வரை நான் கட்டியிருக்க
என் அத்தை சத்தம் போட போட..நீ அணிந்திருக்க
ஆத்திரத்தில் உன் அம்மா அறுத்த பின்..
அழுதுக்கிட்டே புத்தகத்தில் நீ வச்சு வச்சு பாத்திருக்க

இன்னொரு அத்தை பொன்னுக்கு விளையாட்டா நான் நீட்ட
அதை பார்த்து கோவமாய் போன நீ தடுமாறி உழுத வயலில் விழ
சேறு பூசி நீ நிக்க..அடக்காமல் நான் சிரிக்க..கோபமாய் நீ அழ
நம்ம காவேரி ஆத்துல உன் முகம் கழுவி..நான் விடயில்ல
ரொம்ப நாள் ஆசையை கணக்கு பண்னி முத்தம் ஒன்னு வைச்சனே!

உன்னையும் ஆத்தையும் ஒன்னா நினைச்சே..நான் இங்கு வந்தேன்
முன்னே விட அழகாதான் நீ இருக்க..
என் மனசுதான் காத்துபோன பலூனாய் ஆனதடி என் காவிரியை பாத்து!

வீட்டுக்குள்ள படைச்ச மஞ்சக்கயிறு..மொத்தமா இருக்க
மொட்டை கழுத்தோட முன்னாடி நீ வந்தாலும்..
ஆத்தங்கரை சொர்க்கத்தை நினைச்சு ஆடாம நான் இருக்க
தனியாத்தான் நான் இருக்க..
பக்கத்தில சிலயா நீ இருக்க..
வறண்டு போன ஆறு போல வறண்டு போய் நான் இருக்க...

அடக்க முடியாத அழுகையோட....
ஏன் மச்சான் என்ன இப்ப புடிக்கலையான்னு..
சொறுவினியே இன்னொரு கத்தி..!
எப்படி புள்ள சொல்லுவேன் என் மனசு வேதனைய..

ஆத்து தண்ணிய வயக்காட்டுக்கு திருப்பி விட நான் போக
காப்பிதண்ணி நீ கொண்டு வந்த -ஆத்தங்கரை
சொர்க்கமாய் இருந்ததடி..அதை நீ நினைச்சு பார்க்கலையா

80 வயசிலும் ஏர்கலப்பை தூக்கும் என் தாத்தன்
உடம்பு சுகமில்லன்னு படுத்திருக்க..ஏன்னு நான் கேட்டப்ப
"போடா பயலே..காவிரில தண்ணிய கானோம்..
அது கொண்டு வரும் காத்தையும் கானோம்..சொக்கன் கிட்ட போனாதான்-
அந்த சொகம் வரும்னாரே" அதனால அடைச்சுபோயி நானிருக்கேன்

ஊருப்பக்கம் நான் வந்தா..விடக்கோழி அடிக்கையில-
உன்னை விரட்டி விரட்டி வேலை வாங்கும் என் அம்மா சத்தம் கூட குறைஞ்சு போச்சு
பட்டணத்து பய வந்திருக்கான்னு பந்தாவா சுத்தி வரும் என் அய்யன்..
வானத்தை பார்த்து பார்த்து சும்மா இருக்கிறப்ப சுருக்குன்னு இருக்கு புள்ள

மாப்பிள்ளைக்கு கொண்டு வந்தேன் மயினின்னு சொல்லும் உன் அம்மாவ கானோம்
மாப்பிள என்ன சொல்ராப்புலன்னு மறைமுகமா கேக்கும் மாமன்-பொழப்புக்கு
வேற ஊர் போயிருக்கிறாராமே..?

அடி பாவி பொன்னே,,தளதளன்னு நீ இருந்தாலும்..
ஆத்து தண்ணில குளிச்சு நீ கொண்டிருந்த மினுமினுப்ப கானோமெ
உன் முகத்தில அதையும் தானே நான் பார்க்கிறனே.

தண்ணி வராத காவிரியால கலைஞ்சு போய் கிடக்கு ..
நிறைய காதல் ஜோடி..அதை நினைச்சு கவலையில் நான் இருக்கேன் புள்ள
அடுத்த ஆடி கழிஞ்சா நீயும் நானும் ஜோடி அதுக்குதான்-
உங்கப்பன் பொழைக்கப் பொயிருக்காகன்னு சொன்னப்பய நான் நொந்துட்டன் பொன்னு

அடுத்த ஆடியிலாவது ஆத்துல தண்னி வேணும்..
நீயும் நானும் அதுல கூத்தடிக்கணும்..
பிரிஞ்சு போன நம்ம இளவட்ட கூட்டம்..சேர்ந்து இருக்கணும்

உன் அண்ணன் புள்ளயோட..என் அக்கா மக்களோட..
நம்ம புள்ள விளையாட காவிரி இருக்குமான்னுதான் புள்ள-
நான் பரிதவிச்சு போயிருக்கன்

நதிதான் பிரிஞ்சி இருக்கா..இல்ல நாடும் பிரிஞ்சி கிடக்கா
நதியையும் சேர்த்திடுங்க நம்ம நாட்டையும் சேர்த்திடுங்க..
எழுதயில என் மனசே..பேனா மை கரையலியே..
என் உசுரு கரைஞ்சி போச்சு..

பொறக்கிற புள்ளக்கு -தாயா..
வயசு பசங்களுக்கு- முறைபெண்ணா...
வாழற வரைக்கும்-சாமியப்பா எங்க காவேரி!

காவேரி காஞ்சு போச்சு..
எங்க சாமிதான் சாஞ்சு போச்சு
எங்க உயிரெல்லாம் ஓஞ்சு போச்சு..
வேற சொல்ல தெரியல்ல...காவிரி தண்னி கண்ணுல

1 comment: