எல்லாரும்..இந் நாட்டு மன்னர்கள்..
ஓட்டளிக்கும் வரை!
உச்சி வெயிலிலும்.. கூடி நிற்கிறது கூட்டம்..
இரவு மணி பதினொன்று.. பார்ப்பதற்கே மட்டுமே பலபேர்!!
இரவுபகல் முழுதும்.. இளைத்து போகிறது..இளையபட்டாளம்..
கட்சி தொண்டனும் ஒரு வகையில் சாமி தூக்கிகள்தான்..
சாமி வலம் முடிந்து கோவிலுனுள் சென்றுவிட்டால்.. தீண்டமுடியாதவனாய்!!??
ஏகப்பட்ட இலவச அறிவிப்புகள் எலும்பு துண்டுகளாய்!!
ஒரு வீட்டுக்கு சொந்த காரன் தேர்தலுக்கு முன்..
ஊருக்கு ஒரு வீடு தேர்தலுக்கு பின்..
வென்றவனின் சின்ன வீடும் ..
பெரும் மாளிகையில்தான் வாசம்..
இலவசங்கள் வேண்டாம்.. இருப்பதே பறீக்காதீர்கள்..
புதிய தொழிற்சாலைக்கு முன்..
மூடிய கதவுகளை திறவுங்கள்!
உழைப்பிலாத சோம்பேறீ ஆக்காதீர்..
உழவுக்கு வழி கோலுங்கள்..
கஞ்சிதொட்டி நிலை வேண்டாம்..
காவேரியின் கதவை திறங்கள்..!!
ஓட்டுப்போடும் வரை மன்னனாய் இருக்கும்..
இலவசங்களால் பிச்சைகாரனாய் மாறிவிட்ட தமிழன் கேட்கிறேன்!!!
No comments:
Post a Comment