Thursday, 20 December 2012

"அன்னை தமிழின் இன்றைய நிலை! "எழுத்தோலை கவிதை திருவிழா"- படைப்பு 1.


"
அன்னை தமிழின் இன்றைய நிலை!
"எழுத்தோலை கவிதை திருவிழா"- படைப்பு 1.
---- ------- ------
தாயே தடுப்பினும்- விடேன் தமிழை பழித்தவனை
தாயே பழித்தால்.. என் செய்ய

அம்மா என்றழைப்பை- விரும்பாத அம்மாக்கள்
ஆடு மாடுகளுக்கும் - ஆங்கிலம் கற்று தரும் கயமை கூட்டம்

டமில்..டமில் என்று எம் தமிழுக்கு டுமீல்
தொட்டிலிலும் சரி..
கட்டிலிலும் சரி.. தொடா தூரத்தில் தமிழ்

சாதிகள் ஒழிய..கலப்பு மணம்
தமிழ் அழியவா.. மொழிகளவுமணம்

இருபதாயிரம் வருடம் கடந்துவிட்ட களைப்போ.??
முதலில் தோன்றியதால்.. வந்திந்த முதுமையோ??

தமிழ் வாழ்க என்று சொல்லி சொல்லி
ஆங்கில பள்ளிகள் நடத்தும் கோமகன்கள்

தமிழில் பேசதடையிடும்..
தமிழாசிரியர்-தந்தையாக??!!!

ஆயிரம் கைகள் மறைப்பினும்..ஆதவன் மறைவதில்லை
ஆங்கிலம் கலப்பதால் எம்தமிழ் மரிப்பதில்லை!!

இளமை வேகத்திற்கு கொஞ்சம் தடுமாறும் தமிழ்
இளமை உணர்விற்கு கொஞ்சமும் தளரா திமிழல்லவா

கன்னியவளின் கடைகண்களின் கன்னியில் சிக்கிய
காளையர்களின் கைகொடுக்கும் தெய்வம் கன்னிதமிழே!

இவ்வுலகம் மரணிக்கும் வரை..காதல் வாழும்
காதல் வாழும்வரை.. கன்னிதமிழம் வாழும்

இன்றைய தமிழக தேவை...
மின் மட்டுமல்ல...
இன்தமிழும் கூடத்தான்..

கூடி உரைப்போம்..சூடி மகிழ்வோம்
தமிழை..தாய் தமிழை

மன்னை செந்தில் .
"

"தமிழ் வழி கல்வி (எழுத்தோலை கவிதை திருவிழா)-படைப்பு-2


"
தமிழ் வழி கல்வி
(எழுத்தோலை கவிதை திருவிழா)-படைப்பு-2
------ ------- ------ ---- ------ ------ -----
தத்தி தடுமாறி நடக்கும் மழலைகளும்....
மம்மி டாடி என்றே அழைக்கும்
அதனாலோ தடுமாறும் தாய்மொழி கல்வி?

தமிழ்வழி கல்வியில்தான் படித்தேன்
தமிழில் கவிதை பல வடித்தேன்...
ஆனாலும் என் பிள்ளை...??
சுய நல தமிழர்களால் சறுக்கும் தமிழ்வழி கல்வி

மற்ற மொழிகள் ஆடையணியா காட்டுமிராண்டியாய்..
எம் தமிழோ ஐந்து பன்னிசைக்கும் இலக்கியாருவியாய்
மற்றவை..கால்நடையாய் நடக்கும் போதில்..
திருக்குறள் தேரில் சென்றது எம் தமிழ்

அறிவியலை அணைப்பதில்..
பொறியியலை புரியவைப்பதில்..
அணுவியல்..ஆற்றலியல்..மின்னறிவியலில்...
தொடர்புசாதன கல்வியில்..தொடர்பில்லாமலே
சிறிது தடுமாறுகிறது.. எம் தாய் மொழிக்கல்வி!

தமிழ் ஆங்கில களவியலால் வந்ததிந்த..வழுக்கல்

ஒரு வரி ஆங்கிலம் அறியததாலேதான்..
அமெரிக்காவிற்கு போட்டியாய்..சீனா

அமெரிக்கா போவதுதான்..உச்சமாய்
அதுதான் லட்சியமாய் .. நம் கல்வியின் நிலை
அதனால் அடங்கிபோகிறது தாய்மொழி தமிழ் கல்வி!

புரிகிறதோ இல்லையோ..
பொதுமொழியாயிற்று ஆங்கிலம்..
அதில் புகுந்து வாழ்வதே..பிழைப்பாயிற்று

இலவச கல்வியில் மட்டும் தமிழென்பதால்..

தமிழ் வழி கல்வி என்பது..
வருமையின் வெளிபாடாம்..
ஆங்கில கல்வி என்பது..
அடிப்படையாயிற்றாம்!

ஆங்கில கல்வி அவசியமாயிற்று
மற்ற மொழி கற்றல் அட்வாண்டேஜ் ஆயிற்று
தமிழ் வழி கற்கும் குழந்தையெல்லம்..தொழிலாளியாயிற்றே!

ஆங்கிலப்பள்ளியில் படிக்கும்..
அருமை மகன் படிக்கிறான்..
பாரதியின் வரிகளை...
"இனி தமிழ் மெல்ல சாகும்"

மன்னை செந்தில்..

"குழந்தை தொழிலாளர் முறை (எழுத்தோலை கவிதை திருவிழா)- படைப்பு-3


"
குழந்தை தொழிலாளர் முறை
(எழுத்தோலை கவிதை திருவிழா)- படைப்பு-3
------ ----- ------ ----- ----
இனியும் பல்லாண்டு வேண்டும்..
இந்தியா வல்லரசாய் மாற???
ஒரு குழந்தையும் தொழில் சுமக்கா நாள்தான்
அத்திரு நாள்..என்று வருமோ?

படித்தால்..புத்தக மூட்டை..
படிக்காவிட்டால்..ஏதோ ஒரு மூட்டை
புத்தகசுமையை விட அச்சுமை எளிதாயிற்றோ?

ஒரு குழந்தை வரம் வேண்டி.... - கோடி பேர் தவிக்க
பல குழந்தை சாபம் பெற்ற --- பல பேர் பரிதவிக்க
வறுமைக்கும்.. வளமைக்குமான போட்டி
“இடையில்..பெரும் பள்ளம்”
நிரப்ப வேண்டி சுமக்கும் சுமையா??

அரைசாண் வயிற்று பள்ளம் நிரப்ப..
ஓடிகொண்டேயிருக்கிறது ஒரு கூட்டம்..
அதன் முற்றத்தில் விளைந்த....
குருத்தெல்லாம்—பயிறாகும் முன்னே கருகுவதோ??

இலவச உணவிட்டும்..
சீருடை முதல் செருப்பு வரை தந்தும்
சிறகை ஒடித்துகொண்டு... சுமை சுமக்கும் சிறார் கூட்டம்
காசின் மீது காதலா? கல்வியின் மீது வெறுப்பா?

அறிவு பசியை அடக்கிவிடும் வயிற்று பசி..
சிறகுகளை ஒடித்து போடும்.. கட்டுபாட்டு கல்விமுறை!

“பிச்சை புகினும் கற்கை நன்றே”
“வறுமையிலும் செம்மை”
“ஏழைக்கோர் எழுத்தறிவித்தல்”.. அறியவேயில்லை..
ஆங்கில வழி நிற்கும் சமூதாயம்

அடிவயிற்று தீக்கு நீர் வார்ப்போம்
மதிப்பெண்ணால்..அளவிடும் கல்விமுறைக்கு
கல்லறை சமைப்போம்
ஏழை பணக்காரன் பிரித்துவிடா..
சமசீர் கல்வி கொடுப்பொம்
எளிதில் புரிந்து கொள்ளும் தாய்மொழிகல்வி தருவோம்

இளம் சிறார்களின் சிறகை வளர்ப்போம்..
அவமான குழந்தைதொழிலாளர் முறை ஒழிப்போம்..!!

மன்னை செந்தில்
"

Wednesday, 21 November 2012

அவளொடு நட்பிய நாட்கள்..


ஏனோ...
சுடுகிறது இம்மழை என்றேன்

விலகியிருந்த விரல் கோர்த்து
இனி குளிரும் என்றாய்

சுடாத தீ என்றேன்..
ஈர இதழ் ஒற்றி சுட்டதா என்றாய்

மூச்சு காற்றே இல்லை என்றேன்..
உன் மூச்சை எனதாக்கி சரியா என்றாய்

உறுத்துகின்ற புற்கள் என்றேன்..
மடிதந்து பஞ்சுமெத்தை என்றாய்

முதுகில் பாரமென்றேன்
இறுக்கி கொண்டு இலகியதாயென்றாய்

தொடும் தூரத்தில் இரு நிலவென்றேன்..
வெட்கத்துடனே நீ ஆர்ம்ஸ்ட்ராங்கென்றாய்

விளையாட்டாய் நீ வேண்டாமென்றேன்..
நீயும் அதையே வேண்டுமென்றாய் 

விளையாடதே என்றேன்
விளையாட்டில்லை என்றாய்

மிகு வலி யென உரைத்தேன்..
வேறு வழி இல்லை என்றாய்

வாழ் நாள் துன்பமென்றேன்
சில நாட்கள்தானென்றாய்

கண்ணீர் விடையென்றேன்..
சிரித்த முகம் போதுமென்றாய்

தனியாக பேசிக்கொண்டேயிருக்கிறேன்..

பதிலுரைக்க வருவாயா???

Tuesday, 20 November 2012

சாதீ..சாதீ

சாதிகள் இல்லையடி பாப்பா..
பாரதி பெண்களுக்கு மட்டும் சொன்னதோ??
வேறு சாதிகள் வேண்டாமடா தம்பி
சரியாய் நடக்கிறது சாதி அழிப்பு
சரியாகத்தான் போகிறது ஆண்டவன் கணக்கு
இனி மெல்ல தமிழனமே சாகும்!!!

பொய் முகங்கள்

பொய்களை புணைவது என்பது..
எழுத்தில் மட்டுமல்ல ..
பேச்சில் மட்டுமல்ல
ஏன் வாழ்க்கையே கூட
யாருமற்ற அறையில் கண்ணாடி முன் கூட 
அங்கு முகமுண்டு அகமில்லை
விடியலில் கரையும் இருட்டு..
அலசலில் கரையும் அழுக்கு
ஆனால்
வெளிச்சத்தில் வளரும் நிழலிருட்டு போல 
வளர வளர வளரும் புணைகள்!!

எளிதில் முடிகிறது..
பொய்முகமூடியணிந்து புன்னகைக்க
ஏனோ முடியாமலே போகிறது
பொய் முகத்தை துகிலுறிக்க
அதற்கு முதலில் என்முகமதை அணியவேண்டுமே??

அவள்..அவளாலே

வருடத்தின் ஒரு மழை நாள்
ஒரே மழை நாள்
அனுபவிக்க ஆசையாய்
விட்டு விட்டு சொட்டு சொட்டாய்
இமை மூடி ரசித்த வேளையில்
வெறுப்புற்று .. அறை ஒதுங்கினேன்
எனை நனைத்திட்ட ஒவ்வொரு துளியும்
உன் கரம்பிடித்து நனைந்திட்ட நினைவில் நனைக்கிறது!


நித்திரை தின்று 
நிதம் வளர்கிறது உன் நினைவுகள்
நீர் அணைக்க இயலா தீ போல
நீரே ஊற்றவில்லை.. வளர்கிறது
பாலைவன மரமாய்
எனை கொன்று வளர்கிறது உன் காதல்
போடி.. என் இமைகள் விட்டு
உறங்கிய பின் வந்துவிடுவாய்தானே கனவில்!!!??

பதின் மணிதுளிகள்
கடந்தும் உறக்கம் பிடிக்கவில்லை
உரையாடி கொண்டிருந்தேன்
உரையாடல் வழி.. தாலாட்டினாய்
உறங்கி போனேன்..
மறந்துதான் போகிறேன் 
அங்கு பன்னிரண்டு என்பதினை!!

உன் கனவில் நான் வரப்போவதில்லை
உந்தன் சிறு ஓய்வு 
சிதைக்கப்படும் என் சேவைதனில்

போராட்டம்

ஒவ்வொரு படியும் போராடி ஏறிய பின்..
நன்றியுடன் நோக்குவேன்...
கரம் கொடுத்து தூக்கியவர்களை..
திரும்பி பார்க்கிறேன்..
என் கால்களை கீழ் இழுத்தவர்களை...
அதிக நன்றியுடன்..
என் கால்களுக்கு அதிக வலு தந்தவர்களல்லவா!!!

இரண்டாம் படி விரைவில் ... கிட்டும்

நம்பிக்கை

தினம் தினம்.. துரத்தி வருகிறது
தோல்வியெனும் நிழல்..
சுற்றி சுற்றி வருகிறது
வீழ்த்தி விட
இன்று போய் நாளை வா.. என்றே சொல்கிறேன்
தோல்வியின் பக்கம் நிற்கும் போதும்..

முதல்ல ஜெயிக்கிறது முக்கியமில்ல ..
கடைசியில் ஜெயிக்கனும் ..
நாளை என்ற நம்பிக்கையில்தானே..
தூங்கவே போகிறோம்.!!

இரவு தைரியமாய் உறங்க போகும் ஒவ்வொருவரும்
தன்னம்பிக்கையாளர்களே!!!

நாள் பட்ட காதல்

பழைய நாட் குறிப்பேட்டில்
எழுதியதெல்லாம்...
படித்து கொண்டிருந்தேன்..
ஏனோ ஒவ்வொரு பக்கத்திலும் உன் பெயர்
அதனை தடவி கொடுத்தன என் விரல்களும்
தற்பொழுதைய நாட்குறிப்பேட்டில்..
பல பக்கங்களில் இல்லை .. உன் பெயர்
அவசர அவசரமாய் அங்கே அங்கே எழுதுகிறேன்..
தவறை திருத்தும் மாணவனின் துடிப்பிருந்தது அதனில்
ஆனால் காதல்????????

Wednesday, 14 November 2012

பொய்கள்..

எப்படி இருக்கிறாய்..
நல்லா இருக்கிறேன்...
தினமும் பறிமாறி கொள்கிறோம் பொய்களை
அங்கு நீயும்
இங்கு நானும்
எங்குமில்லை நலம்
முடி துறந்து நான்..
கோதும் உன் விரல்களில்லாது
முடிகள் கூட உதிரும் போது
நா மட்டும் சொல்கிறது..
நான் நலமென்று.

Wednesday, 24 October 2012

பாறை துளைக்கும் வேர்கள்

பாறை துளைத்திடும் வேர்கள்..
பாவையவளின் கண்கள்..

பறவையின் எச்சமது..
பல பாறை துளைத்து செடியாகும்

கவனமேயில்லாமல்..நீ 
பார்த்த கருணை பார்வைதானடி காதல் செடியாய்

இறுக்கமாய்..இறுகி
பாறை யென வலம் வந்தேன்
சின்னதொரு தட்டலில்..
வெளி வ்ந்ததிந்த காதல்.. தேரைஒளிந்த பாறையாய்

பாறை சிறை மீண்ட தேரையாய்
அலைகிறது கண்ட படி உனை காணும்படி
கட்டுபாடு இழந்து.. சுய கர்வமழிந்து
உன்னுருவம் தேடும் அடிமை விழிகள்

கசந்திட்ட இகழ்ந்திட்ட காதல் கவிதைகளை
தேடி தேடி படிக்கிறது..பிடிக்கவும் செய்கிறது இன்று
பாறை இடுக்கு செடி..
அதனை ஆழப்பிளந்து மரமாய் இன்று

பிறை நெற்றி பொட்டு..
இட்டுவிட துடிக்கும் விரல்கள்

வில்லாக புருவம்..
அம்பாய் விழிகள்..காயப்பட காத்திருக்கும் மனது

அழகிய சர்ப்ப உதடுகள்
தீண்டும் நாக்குகள்.. செத்துவிட தயாராய் நான்

சங்கை நினைக்கவில்லை ..
 மஞ்சள் நாண் தேவைப்பட்டது.. உன் கழுத்திற்கு

வளை கரங்களை வளைக்கும் நாளை
பாத கொலுசை பறித்துவைக்கும் நாளை

தேடி தேடி ஓடும் மனமதை ..
பாறையென சொல்லி ஏமாந்திருந்தேன்

உளி தாங்கும் பாறைகள் சிலையாகும்
நானோ தேரையோடிய பாறை..
உளி தாங்க மாட்டேன்..
என்னில் சிலைகள் வேண்டாம்..
நீ துளைத்து வளர்த்திட்ட செடி போதும்
தண்ணீர் தராது போ..
ஆனால் வெந்நீர் ஊற்றாதே

விடிந்ததும் .. மறைந்திடும்
பனிதுளி போல மறைந்து போனாய்
உன் பார்வைகள் அனைத்தும்...
பாறை துளைக்கும் வேர்களாய் என்றுமே!!







Friday, 28 September 2012

எழுத்தும்..நடப்பும்

எழுத்துகளை கண்டே மனம் பதைபதைக்க ..இங்கு வெள்ளை கார அரசாங்கமில்லை..
பாரதி எழுத்தும்..பகத்சிங் வீரமும் ஒன்றாய் கண்ட 
உண்மை ஆட்சி இல்லை இங்கு
மக்களை மதிக்காத ...அம்மையார்கள் ஆட்சி
நம் உரிமையை விற்று திங்கும் திருட்டு கும்பலாட்சி
தோரிய மண் விற்ற
கிராணைட் விற்ற
நிலகரி விற்ற..
சிறு வணிகத்தையும் விற்கும்
கள்ள காதலுக்கு பிறந்தவர்களின் கையில் நாடு
அதனில் நாம்..
பதவிற்காய் பெண்மணிகளின் இல்லை பெண்கல்லின்
பாதம் பணியும் வீர ஆண்மகனை கொண்ட நாடு..
என் எழுத்து மட்டும் என்ன செய்யும்..
காசிற்காய் தாய் விற்க துணிந்த இக்கூட்டத்தை????

தோல்வியில்..வெற்றி

தோல்விதனை..நியாயப்படுத்த
ஆயிரம்.. காரணங்கள்
ஆனால்..அவற்றினால்
ஒரு..வெற்றியினை.. தரஇயலாது!

வெற்றி..காரணங்களால்.. கிடைப்பதில்லை
காரியங்களால்.. கட்டமைக்கப்படுகிறது.

பெரும்..பெரும்..திட்டங்களை..வி
ஒரு சிறு செயல்...வெற்றியினை...தந்துவிடும்!

Monday, 10 September 2012

தனிமை கிறுக்கல்

வெறுமையை தூவி செல்லுகிறது தனிமை..
எதனை அடைகிறேன் என்றே தெரியவில்லை
மனதின் பாரங்களை ஏற்றிவிட்ட ஆசைகளை 
கொல்லாமல் கொல்லுகிறேன்..
அவை இறக்கமாலே பல்கி பெருகும் வைரஸாய்
உனக்காய் தோன்றிவிட்ட ஆசைகளை...
உன் பிரிவின் வலியில் நொறுக்க பார்க்கிறேன்..
பணமெனும் மாயப்பேயை கட்டி செல்ல முடியாமல்
தூங்காமல் தூங்க முயலுவேன்..

தளரா மனம்...

வழி தவறும் பறவைகளின்...
இறக்கைகள் வலுவனாதாய் மாறி போகிறது!!
தனிமைப்பட்டு போகும்.. களிறு..
மூர்க்கமாய் மாறி போகும்!!
அடிப்பட்ட நாகம்..அதிகமாய் சீறும்!!
மாதா மடிபிரிந்த மந்திகள்
மனமுடைந்து மாய்வதில்லை..!!

அறிவால் உயர்ந்த மனிதா..
தோல்வியில் ஏன் துவண்டு போகிறாய்???
தடைகள்தான்.. தளரா மனம் தரும்...
துயரம்தான்.. நெஞ்சுரம் தரும்...
தோல்விகள்தான் வெற்றி வேட்கையளிக்கும்

வெற்றிக்கான விடியல் நாளையே கூட இருக்கலாம்!!!

Tuesday, 17 July 2012

கிறுக்கு


யாராலும் கவனிக்கப்படாத எழுத்துகள்..
அரவம் அலையும் காட்டில் விளைந்திட்ட கனிகளாய்
காளையரே அற்ற கிராமத்தில் கனிந்திட்ட கன்னிகளாய்
மலை உச்சியில் ஊற்றெடுத்து காலில் கடலில் விழும் அருவியாய்
கண்ணாடியில் தன்னையே ரசிக்கும் ரகசிய நோயாய்..
என் எழுத்தை நானே உச்சி முகரும் நோயும்!!??

சச்சின்..நூறுகர்


நூறில் நூறு..
நூற்றுக்கு நூறு.. 100/100
சொல்லும் போதே துடிக்கும் மனம்

பல வருட பள்ளி கனவு.. பலருக்கு
பள்ளியில் வாங்கவில்லை
அதனால் வாங்கி விட்ட .. நூறு

அடித்து எழுதினால் கிடைக்கும் முட்டை
அடித்து அடித்து ஆடினால் கிட்டும் நூறு!

கல்லூரி முடித்த பின்னும்..
முதல் வகுப்பு மாணவனாய் .. பயிலும் அடக்கம்
பலவருடம் பார்த்தும் அலுக்காத ஆட்டம்

காதலி மனைவியானல்
சலித்து விடும் மானுட காதல்
பல வருடமாய் சலிக்காமலே உன் காதல்

பதினாறில் தேடும் பலகனவுகள்..ஆசைகள்
பதினாறு தொடங்கி 22 வருடமாய் ஒரே கனவு ஆசை

குடிக்காத தலைமுறை இலாமல் போகும் அபாயம்
அபயமாய் கோடிகள் மறுத்தாய் குடி வெறுத்தாய்
சத்ய குடிமகன் நீ..

கனவுகள் மெய்படும்.. ஒரு நாள்
அன்னாள் வரை அதனை துரத்துங்கள்
எத்துனை உண்மை.. உன்னால்
உனை போல கனவை துரத்தட்டும் ஒரு தலைமுறை..!


மரண சுகம்..


மரணத்தில் சுகம்..
அவள் மடி சுகம் தரும்..
நிதம் மரணம் தேடும்.. மனம்!

ஓய்வின்றி உழைக்கும்..மனம்
நேரம் பார்க்க மறுக்கும் விசுவாசஅடிமை குணம்
உறக்கம் தரும் ஓய்வும் கனவுகள் களவாடி போகும்

காலணி கழற்றிவிடுவதோடு..
கடமை சுமையை கழற்ற முடிவதேயில்லை

நீ அருகிலிருக்கும் நேரம்..
அழைப்பு பொத்தான் அழுத்தும் நேரமே
கண் கட்டும் சோர்வை
கதவை திறந்து கட்டியணைத்து
களைப்பை ஆடையை அகற்றி
காதல் மொழி கண் பேச
கை சுடும் தேனீரும்
மீட்டெடுக்கும் எனை

சிறப்பு வகுப்பு சிறை சாலைதாம் வீடுகள் பெண்களுக்கு
சிரிப்போடு வலைய வ்ரும் ஸ்ரீதேவிகள் எல்லாம் ஆயுள் கைதிகளே
அக்கம் பக்கம் பேச்சு சுகமும் இங்கில்லை
தொலைகாட்சி சுகமும் நீ விரும்புவதில்லை
விருப்பமிருந்தாலும் விடப்போவதில்லை நம் வாலு
சிரிப்போடேஇருந்தாய் சிறப்பாய் சில நேரம் செருப்பாய்

திறக்க நீ இலை தெரிந்தும்
அழைப்புமணி அலுத்தும் விரல்கள்
தேனீர் வாசம் மறந்துவிட்ட சமையலறை
நட்பு வட்டம் சூழும் வார இறுதி
வெறுமை மட்டும் சுமக்கும் மனம்
காதல் திருமணம் என்று சொல்லி வந்தேன் அர்த்தேமேயில்லாமல்
உண்மையான காதலை இப்பொழுதுதானே சொல்ல தொடங்குகிறேன்
வார்த்தைகளால் இல்லை.. கண்களால் அது உகுக்கும் கண்ணீர் துளியினால்

கண்ணோரம் கசிந்திட்ட ஒரு துளிதான் உணர்த்தியது
காதல் எதுவென்று!!??


உறங்க வேண்டும் ..
உண்மையாய்
ஒன்று உன் மடி வேண்டும் இல்லையேல்
மரணம் வேண்டும்!!!

Monday, 16 April 2012

பண..மனிதர்கள்..


குருதி கறையுடன்...
குற்ற உணர்ச்சி இல்லாமல் ... வலம் வருகிறது பணம்!!!
பணத்தாசை மனிதர்கள்..
குருதி வடியும் கோர பற்களுடனே.. வலம் வருகிறார்கள்
பசப்பு வார்த்தைகளும் கள்ள சிரிப்புமாய்..
துரோகங்கள் பணம் கட்டும் கயிறுகளாய்.. மாறி போன பின்
துரோணாச்சிரியர் வேடமிடும் கயவ கூட்டம்
உழுது அறுத்த பின் பதறாமல்.....
பதர்தனை கூலியாய் தரும் குள்ள நரிகள்
தாமதப்படுத்திய நீதியும்.. கூலியும் ஒன்றுதான் என்பதை
உணரமறுக்கும் உத்தமர்கள் வருகிறார்கள்..
இரத்தம் தோய்ந்த புன்னகையுடன்.. கரம் குலுக்க
காத்திருக்கிறேன் கரம் குலுக்க வெட்கத்துடனும் வேதனையுடனும்!!

Sunday, 15 April 2012

நிழலும் உனக்காக..


எந்தன் நிழலை தேடி கொண்டிருந்தேன்..
காலை வேளையில் சந்தித்து ..
கண்கள் கதை பேசி கைவிரல் பிரிந்த பேருந்து நிறுத்த ஓரம்
உன் கூந்தலில் தவறிட்ட நானும் மறந்துவிட்ட
ஒற்றை ரோஜாவை ....
வாடாமல் காத்தபடி காத்திருந்தது என் நிழல் !!!

அண்ணல் அம்பேத்கார்-14.04


செருப்பணியாத கால்கள் உண்டு இன்றும்..
செருப்பு கூடாது எனும் செருக்கில்லை இன்று!
சட்டை அணியா மனிதன் உண்டு இன்றும்...
சட்டை கூடாது எனும் சட்டாம்பிள்ளைகள் இல்லை இன்று!
பெண் வன் புணர்ந்தவனும்..
அதை சரியென்று சொன்னவனும்..
சாதீய சதி வளர்த்தவனும்.. வீழ்ந்துவிட்டான் இன்று
அதை வீழ்த்திய ஆயுதத்தில் கூரியது..அம்பேத்காராம்..!
சட்டத்தை மதிக்கும் அனைவருக்கும் நல் தலைவனவன்..
தலித்திற்கு மட்டுமன்று! வாழ்க வளமுடன்!

ஒரு மழை..


கூட்டப்படாத சாலைகளையும்
கவனிக்கப்படாத கட்டிடங்களையும்
கட்டிபிடித்து கழுவிட்டது
கருணை மிகு கார்மேக மழை!!

ஓட்டம்....


ஒரு கூட்டம்
ஓடி கொண்டே இருக்கிறது..
பள்ளமாகிபோன அரைசான் வயிற்றை நிரப்ப!
மறு கூட்டமும்
ஓடி கொண்டே இருக்கிறது..
அதிகம் நிரம்பி வீங்கிவிட்ட அரைசான் மேடை சமப்படுத்த!???

Thursday, 12 April 2012

சிலந்தி..பூ


சிறு இதழ் பிரித்து சிரித்துவிட்டாய்
சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சியாய் மனது
சிக்கலை விடுத்து வர சிறிதளவும் முயலவில்லை
சின்னஈர இதழ் விரித்து சிறிதுசிறிதாய் தின்று விழுங்கும்
சிற்றின்பத்திற்காய் தவமிருக்கிறேன்!!!!??

Tuesday, 10 April 2012

ஓய்வு...???


இனிய இரவும் அதன் நிலவும்..
நினைவுகளை கிளறிவிட்டு நித்திரையை கொன்றுவிட்டு
ஓய்வெடுக்க ஓளிந்து கொண்டது.. பகலவனின் முதுகில்
பகலவனின் சூடும்..பணியின் சுமையும்..
பகலையும் ஓய்வற்றதாக்குகிறது...????
உன் நினைவிகளிருக்கும் வரை ஓய்வின்றியே கழியும் என் நாட்கள்!

பருவம்


சொல்லாத சித்திர கதைகள்...
கேக்கப் படாத தாலாட்டு..
பயமுறுத்தாத கும்மிருட்டு..
பகிரப்படாத பொய் சொன்னால் கண்குத்தும் சாமி கதைகள்...
அர்த்தமற்றதாகி கொண்டிருக்கிறது.. "குழந்தை பருவம்"

நிஜ நிழல்


நிஜத்தை ஒதுக்கிவிட்டு ..
நிழலை , நினைவை நேசித்து கொண்டிருக்கிறேன்..
எனை ஒதுக்கிவைத்து துன்புறுத்துவதேயில்லை..
உன் நினைவுகளும்..நிழலும்!!

Thursday, 5 April 2012

மறதி....


மறுத்தாயா.. மறந்தாயா..
இனி
மறுப்பாயோ ..இல மறப்பாயோ..
நான் மறவேன்
மரணிக்கும் வரை..
நீ காதல் மறுத்த தினத்தையும்
காதல் மரணித்த தினத்தையும்...

தேதி..


ஏதெனும் பாரங்களை ஏற்றி கொண்டே..
நகர்ந்து விடுகிறது இந்த நாட்கள்..
தேதி கிழிக்காமலே ஏன் நகர்கின்றன நாட்கள்..
பத்து தின நாட்களை மொத்தமாய் கிழிக்கையில்..
இந்த வேலையையாவது தினம் ஒழுங்காய் செய்து கிழித்திருக்கலாமோ????

Tuesday, 20 March 2012

பூமி...


சுற்றி கொண்டேயிருக்கிறது...
சுற்றி சுற்றி ஓய்ந்து விடாமல் .. வேகம் கூட குறைந்து விடாமல்
சுற்றி கொண்டேயிருக்கிறது..
ஓய்வெடுக்க இரவை அமைத்து கொடுத்துவிட்டு..
ஓய்வென்றி..சுற்றும் பூமி!!!!

சச்சின்..


நூறில் நூறு..
நூற்றுக்கு நூறு.. 100/100
சொல்லும் போதே துடிக்கும் மனம்

பல வருட பள்ளி கனவு.. பலருக்கு
பள்ளியில் வாங்கவில்லை
அதனால் வாங்கி விட்ட .. நூறு

அடித்து எழுதினால் கிடைக்கும் முட்டை
அடித்து அடித்து ஆடினால் கிட்டும் நூறு!

கல்லூரி முடித்த பின்னும்..
முதல் வகுப்பு மாணவனாய் .. பயிலும் அடக்கம்
பலவருடம் பார்த்தும் அலுக்காத ஆட்டம்

காதலி மனைவியானல்
சலித்து விடும் மானுட காதல்
பல வருடமாய் சலிக்காமலே உன் காதல்

பதினாறில் தேடும் பலகனவுகள்..ஆசைகள்
பதினாறு தொடங்கி 22 வருடமாய் ஒரே கனவு ஆசை

குடிக்காத தலைமுறை இலாமல் போகும் அபாயம்
அபயமாய் கோடிகள் மறுத்தாய் குடி வெறுத்தாய்
சத்ய குடிமகன் நீ..

கனவுகள் மெய்படும்.. ஒரு நாள்
அன்னாள் வரை அதனை துரத்துங்கள்
எத்துனை உண்மை.. உன்னால்
உனை போல கனவை துரத்தட்டும் ஒரு தலைமுறை..!

தவறு செய் மனமே..


செய்துவிட்ட தவறுகள் வருந்தி ஓய்ந்த பின்
செய்ய வேண்டிய தவறுகள் வரிசை கட்டி நிற்கும்
ஓய்வெதும் வாழ்வதும் தவறுகள் வழி
தவறி செய்த தவறுகள்..
தவறாமல் செய்வது வாழ்க்கை முறையாய்...
சரியாய் தவறு செய்ய கற்ற கொள்வதே லட்சியமாய்!!

Tuesday, 13 March 2012

ஈழமும்..இறைவனும்!!!


கொட்டிய வார்த்தைகளை திரும்ப பெற..
மனிதனுக்கு வழியெதுமில்லை..
அது போலத்தான்

எழுதிய எழுத்தை அழிக்க இயலாமல்
தூக்கமின்றி தவிக்கிறேன்..!!!???

இறைவன் சொன்னது..
ஈழத்தமிழனின் நிலை குறித்து..???

FB கிறுக்கல்


கனவுகள் ...
இனிப்பானதோ.. கசப்பானதோ..
அவை தூக்கம் உண்ணும் பட்சிகள்!!

என்னென்ன வார்த்தைகள் சொன்ன பின்பும்
கவிதை தமிழில் காதலுரைத்த பின்னும்
கம்பன் விட்ட வருணனையை கண்டுணர்ந்து சொன்ன பின்னும்
தடுமாறி தோற்று போகிறது...
உன் அழகான மௌனத்தின் முன்
என் ஆடம்பர வார்த்தைகள்..!!!

நான் தமிழ் கவிஞன்


முழுமையாய்.. பாரதி படிக்கவில்லை
கம்பன் ஊறுகாய் போல கடித்ததுண்டு
இலக்கணம் அறிந்தால் தலைகணம் வருமென்று விட்டேன்
தமிழுக்கு மதிப்பெண்ணால் ஒரிரு நாட்கள் வந்திட்ட இலக்கியம்
மனப்பாடமில்லையெனில் இந்த சில குறளும் உளறளாய்தான்
நான் தமிழன்.. மேலும் கவிஞன்!!!!!!

Tuesday, 28 February 2012

பணியில் பிணி


விதைக்காமல் அறுப்பதை.. 
கை கட்டி வேடிக்கை பார்ப்போம்
கழுத்தில் இட்ட மாலை கழுத்தறுக்கும் போதும்...
கட்டுண்டு இருப்போம்..
விதைத்து அறுத்து கோடிமணிகள் அடைத்தனுப்பி
காலி வயிறுடன் உறக்கம் கொள்ளும் விவசாயிக்காய்
கண்ணீர் வடிக்கும் பெருமழை வானம்!!


பிறவி பயன்..


பழுத்து விழுகிற இலைகள் கூட
மக்கி உரமாகும் மண்ணுக்கு..
இரந்து..இருந்து பின் இறந்து
உரமாகும் மண்ணுக்காவது என்ற பிறவிபயணை
சிதைத்துவிட்டது வளரும் மின் மயானம்!!!!

கிறுக்கல்..


என்ன எழுதுவென்று தெரியாமலே..
சோம்பி திரிகிறது சிந்தனை குதிரை
காதல் கழனி குடித்து குடித்து ..நிரம்பி போனதால்
கொள்ளு எள்ளு தேடாமல் திரிகிறது
நுனி புல் மேய்வது போல்..
அழுத்தமில்லாமல் கிறுக்கும் சிறுமனம்!!

Thursday, 16 February 2012

யாருக்கும் தெரியாமலே.....

எந்த மரம்..

தருகிறெதென்று தெரியவில்லை

எனக்கான மூச்சு காற்றை..

யார் நெய்வார்கள்

எனக்கான சட்டையை

யார் நட்ட மரமோ

என்னுள் போன பழத்திற்கு

விதைத்தவனையும்..

அறுத்தவனையும் தெரிவிக்கவில்லை

நான் கொண்ட நெல் மணிகள்

பிடித்தவனின்..

பெயர் பொறிக்கபடவில்லை

பதப்படுத்திய மீனில்

மூச்சடக்கியவன்

பெயர் தெரியாது..

முத்து மாலையில்

வீணையின் ஸ்வரமும் ..

மீட்டுபவரும் அறியவில்லை

செய்தவன் பெயரை..

இசைகள் சொல்லப்போவதேயில்லை

புல்லாங்குழல் தந்திட்ட மூங்கிலை பற்றியும்

செய்திட்ட கைகளை பற்றியும்..

பியொனா..

வாசிக்கின்ற விரல்களுக்குதான் மரியாதை

செய்திட்ட கரங்களுக்கு இல்லை

நிழல்கள் நேசிக்கப்படும்

நிஜங்களோ நசுக்கப்படும்

உருவாக்கும் விரல்களுக்கு

தேவையெல்லாம் ஒரு கவளம்தான்

Wednesday, 15 February 2012

அவளாலே..

தூக்கம் வரா இரவுகளில் வந்த கவிதைகளை விட
தூங்கும் கணத்தில் நீ கனவில் கலைத்த பின்
கிறுக்கும் வரிகளில் மிக அழகாய் ஒளிந்திருப்பாய் நீ
ஏதோ குறையுடைய ஓவியம் போலவே
முழுமையாய் நீ வராத கனவால் கலையும் தூக்கத்தை
ஈடு செய்ய முயலும்.. சின்ன கவிதைகள்
முழுமையடையாமல் .. என் கனவை போலவே
விரும்பும் நேரத்தில வர மறுக்கும் கனவை போலவே
சில சமயம் கவிதையும்.. தொடர்பின்றி
என் கனவையும்.. கவிதையும் கட்டி போட்டவள் நீ!

மெதுவாய் மிக மெதுவாய்..
உள் நுழைந்து வெகு சீக்கிரமே ஆக்ரமித்துவிட்ட உன் நினைவுகளே..
விரட்டுவது போல் நடித்து கொண்டிருக்கிறேன்
சில கவனக்குறைவுக்கு காரணமாகிவிட்ட
நினைவெனும் சுமையை இறக்கிவிட எத்தினிக்காமல்
சுமையுடன் ஓட முயல்கிறேன்.. கழுதை போலே
ஆனாலும் சுகமாகத்தான் இருக்கிறது. நினைவு சுமைகள்!

காதல்..எனப்படுவது..???!!!!!

பல கேள்விகுறி சேர்ந்த

ஒரு ஆச்சரிய குறியோ காதல்

விழியில் விழுந்துவுடன்

முளைக்கும் ஆல்மரவிதை காதல்

விழியில் விழ கூட இல்லை

செவியின் வழியும் காதல் ஆசை அலைகள்

கடிதத்தில் மட்டுமே கண்டுணரும் காதல்

பக்கத்து வீட்டு காதல்

எதிர் வீட்டிலும் காதல்

முறைபெண் ஆசை காதல்

மாமன் மகள் காதல்

அத்தை பையன் ஆசை காதல்

அண்ணியின் தங்கையால் காதல்

அக்காவின் நாத்தனாராகி காதல்

மதம் மாற்றும் காதல்

ஜாதி மறுக்கும் காதல்

பள்ளி வயது காதல்

கல்லூரியிலும் காதல்

பணி பக்கத்து இருக்கை காதல்

பேருந்து கடக்கையில் காதல்

தெரு முனை சந்திப்பில் காதல்

பிள்ளையார் கோவில் வலகாதல்

நட்பின் காதல் தோழமையால் காதல்

காமம் உந்திதள்ள வந்திட்ட காதல்

புன்னகை மட்டுமே பரிமாறிட்ட காதல்

புன்னகைக்காத போதும் ஒரு தலை காதல்

உலகையே எதிர்க்க வைக்கும் கள்ள காதலும்

எதுதான் காதல்..எதிலும் காதல்

காதல் காணும் உலகம் பல

காதல் காணாத உலகமே இல!!!

Monday, 6 February 2012

எக்காலமும் அவளாகி

விடியலின் .. வேளை

சூரிய உதயம்

பிறை நெற்றியில்.. வட்ட குங்கும பொட்டாய்

முன் பனி காலை..

புல் வெளி பனிதுளி

உன் இதழ் நீங்கா வியர்வைதுளி

கார்கால மேக கூட்டம்

தோளும் இடையும் கூட்டும் கூந்தல் காலம்

நிலம் வறண்ட கோடை

ஒன்றிரண்டு வெடிப்புள்ள பாதப் பிரதியாய்

மரம் குளிக்கும் மழை மாலைகள்..

கூந்தல் வழிந்திட்ட குற்றால அருவி நிலை

தொட்டசினுங்கி சுருங்கும் ..

முன் மாலை பொழுது

இமை நெற்றி சுருங்கும் சிந்தனை வேளைகள்

குயில்கள் குக்கூவிடும் வசந்தம்..

உன் நிலை கண்ணாடி அறியும்

கூந்தலுடன் பிறந்திட்ட கானங்களை

இயற்கையுடன் இயைந்திட்ட இவளை

இறக்கும் முன் மறக்கப்போவதில்லை

நான் இறக்கும் முன் அவள் எனை நினைக்கப்போவதுமில்லை!!!

Tuesday, 31 January 2012

நிலா இரவுகள்...

துரத்தி பிடித்த நிலா நாட்கள்..

நிலா கண்டுபிடிகாதிருக்க ஓடி ஒளிந்த மர இருட்டுதினங்கள்..

நான் பிடித்த நிலா அழகா.. நீ பிடித்த நிலா அழகா..

முற்றத்தில் முற்றுபெறாத நிலா சண்டைகள்..

முழு நிலா முன்னிரவில்..

முன் நீண்டிருக்கும் நிழல் துரத்தும் விளையாட்டு

உன் நிழல் நான் மிதிக்க ..

என் நிழல் நீ மிதிக்க.. துரத்திய ஓட்டதினங்கள்..

கூட்டாளிகள் தூங்கப்போன பின்..

என் தலை நிழல் மிதிக்க நானே முயன்ற முட்டாள்சுகங்கள்..

வால் கடிக்கும் நாய் போல..

அலை அழிக்காத மணல் கோட்டைகள்

மனதில் வசிக்கும் வாச நினைவுகள்..

பத்தை தாண்டிய..

பருவத்தில்.. நிலா காய ஆற்று மணலில்

கட்டி புரண்ட கபடியாட்டம்..

பதினைந்தின் .. பருவத்தில்

அதே முழு நிலா விடுமுறையாயின்..

அதிக கொண்டாட்டம்.. நடு நிசி வரை கிரிக்கெட்

கல்லூரிபருவம்..

முழு நிலவும்..

ஆற்று திருவிழாவும்..

வண்ண தாவணி கூட்டம்

கருப்பு வெள்ளை இரவுகளை கலராக்கிய நிலாக்கள்

அழகிய நிலாவுடன்..

ஆற்று மணலில்..

காதல் கன்னியுடன்

கரம் கோர்த்து நடந்தது ..

ஒட்டிய மணலும்.. தட்டிய நாட்களும்

போகாமலே நினைவுகளாய் ஒரு துளி கண்ணீரோடு!!

இதோ மொட்டை மாடியில்

தேயும் இளமையுடன்..

தேய்ந்து வளரும் நிலாவை ரசிக்க இயலாமல்!!!

Friday, 27 January 2012

நிலா..இரவுகள்

துரத்தி பிடித்த நிலா நாட்கள்..
நிலா கண்டுபிடிகாதிருக்க ஓடி ஒளிந்த மர இருட்டுதினங்கள்..
நான் பிடித்த நிலா அழகா.. நீ பிடித்த நிலா அழகா..
முற்றத்தில் முற்றுபெறாத நிலா சண்டைகள்..
முழு நிலா முன்னிரவில்..
முன் நீண்டிருக்கும் நிழல் துரத்தும் விளையாட்டு
உன் நிழல் நான் மிதிக்க ..
என் நிழல் நீ மிதிக்க.. துரத்திய ஓட்டதினங்கள்..
கூட்டாளிகள் தூங்கப்போன பின்..
என் தலை நிழல் மிதிக்க நானே முயன்ற முட்டாள்சுகங்கள்..
வால் கடிக்கும் நாய் போல..
அலை அழிக்காத மணல் கோட்டைகள்
மனதில் வசிக்கும் வாச நினைவுகள்..

Sunday, 8 January 2012

உறக்கம் கொல்லும் உன்மத்த காதல்...

உறக்கத்தை பிடித்து நிறுத்திவைக்கிறது..

உன்மத்த நிலை அடைந்த காதல் நினைவுகள்..


இமை திறந்தும்..

இமை மூடியும்..

மறையா உருவங்களாய்.. நாம் உலவிய தினங்கள்


சிறு தூறல்..

சில்லென்ற காற்று காலத்தில்

சிக்கனமாய் சிரித்து அறிமுகமானது


நல்லதொரு நட்பு வட்டம்

நாட்கள் சிலவற்றில் நீயும்


பெண்ணென்று பிரித்திரா தோழமையில்..

பெண்தான் என பிரிந்து நின்றவள்


கண்ணியத்தில் கட்டுகுலையாதவனை

கண்ணசைவில் கன்னியவனாய்..


திகட்டாத நட்பு விருந்தில்

திகிலூட்டும் காதல் ரசம் தந்திட்டாய்


அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும்

ஆசை பார்வைகளும்

இதழ் சுழிப்புகளும்

ஈரக்காதல் விழிகளும்

உறக்கம் கொன்ற உள்ளுணர்வுகள்..

உந்தி தள்ள ...


காற்றும் மழையும் காதல் கொள்ளும் நாளில்

கனியவள் கரம்பிடித்து உறைத்ததென் ஆசையை


எனை பொசுக்கிய அதே புன்னகையை

ஏமாற்றம் தருவதற்கும் முன்னோட்டமாய்


வெடியென சிரித்தாய்..

இடிச்சத்ததில் நல்ல வேளை கரைந்து போயிற்று..


கன்னிகள் வீழ்த்தாத எனை

கண்னிமை கன்னி வைத்து வீழ்த்தும் வேகத்திலிருந்தாய்...வென்றாய்


சடுகுடு போல சதிராடினாய்

சத்தமின்றி சிதறினேன்..


கண்ணிமை தாண்டி கரைஉடைத்து கண்ணீர்..

கார்மழை கன்னத்தில் வழிய ஆண்மை காக்கப்பட்டது..


சின்னாபின்ன நெஞ்சம் மறைத்து

சின்னதாய் முறுவலித்து கரம் குலுக்கி

உன் புன்னகை முகம் நெஞ்சில் நிறைத்து

விலகும் நேரமும் கன்னம் முழுதும் மழை கண்ணீர் மறைத்து


தொலைதூரத்திலே கடந்து

அரிதாய் புன்னகைத்து

காலம் கடந்து.. நட்பின் வற்புறுத்தலால்

நல் நண்பனாய் வந்தமர்ந்து..

வள்ளுவன் வாசுகியாய் வாழ வாழ்த்து சொல்லி

விலகி வருகையில் என் கண்ணோர முத்தின் அர்த்தம் தெரியும்..


உன் கண்னோரத்திலும் முத்து..

வியர்வையா?

கல்யாண வேள்வி புகையோ?

இல்லை...?????

எண்ணி எண்ணி உறக்கம் கொல்லுகிறது..

உன்மத்த நிலையடைந்த காதல்!!!!