Sunday, 31 October 2010

நான் வண்டு மழை காற்று-அவள்

வண்டினத்திற்கே..

என் மீது கோபம்..

உன் தேனுதட்டு தேனை ஒருமுறை பருகியதால்!

மழை துளிமீது எனக்குண்டு கோபம்..!

பிறகென்ன...

பிறை நெற்றியில் விழுந்து..

கூர் நாசி கடந்து..

திகட்டாதேனுறும் உதட்டை வருடி..

நான் ஸ்பரிசிக்கா தரிசிக்கா..வழிகடந்து..

நாபிகமலத்தில் தேங்கினின்று பரிகசிக்கிறதே!

கார் குழலில் அலைபாய்ந்து..

இனியவளின்..இடைவெளிகாட்டி

கால் நகம் வரை சுதந்திர உலா வரும் ..

காற்றே..

உனக்கும் உண்டு சவால்!!

கனியவள்...அனுமதித்து அணைக்கின்ற வேளையில்..

எங்கள் இடை புகுந்து..

வெளியேறி பார்??!!


Monday, 25 October 2010

காதல் பித்தன்.

கண்மணிகள்..தேவையில்லை

எனக்கு..

அவளை காணாத நேரத்தில்!

கனவில் வரவேண்டாமடி நீ....!?

அதன் பின்..

தூங்குவதையே தொழிலாக்கி விடுவேன்!

சிந்திக்க தெரியாத சிறுவனாய்தான்..இருந்தேன்

அவளை காணும் வரை!

கவிதைகள் எழுதும் பித்தனானேன்..

காதலை அவள் ஏற்காததால்!


Sunday, 24 October 2010

காதல்..ரத்து

சிற் சில ஊடல்களுக்கு பின்...

அழைத்தாய்..

வர சொன்னாய்..

வந்து நின்றேன்..

தொலைபேசினேன்..

கால் மணி காத்திரு என்றாய்..

கால் நாள் கழிந்தது..

கால் வலிக்க ..கைபேசினேன்..

சூல் நிலை அமைய வில்லை என்றாய்..

சூரியன் காணாதகாந்தியாய்..

சுருங்கி போனேன்..மன வலியில்!

தொடர்ந்த சில தினங்கள்...

தொலைபேசவில்லை..

வளர்த்திருந்தேன்..

வைராக்கியம்..தாடியுடன்..

அலைபேசியில்..அழைத்தாய்..

குரலில் தேன் கலந்திருந்தாய்..எப்பொழுதும் போலவே..

வண்டு..வந்தே சேரும்..

என அறிந்தே இருப்பாய்...!

சிலமணிதுளியில் வா என

ஒழுங்கற்ற தோற்றத்துடனே..

ஓடி வந்தேன்..ஓசை எழுப்பிய ஆசையில்..

கையில் புகைப்படம் வைத்திருந்தாய்..

கண்ணாடியில் கவனித்து சொல்..யார் சிறப்பு என்றாய்????

கண்ணாடி சிரித்தது ...பைத்தியம் என்று!

வராதே என சொல்லி..அழைப்பிதல்!!

கை மாற்றிய ...

கடிதங்கள்..கேட்டாய்---

கள்ளி..இப்பொழுதும் தேன் கலந்திருந்தாய்..!!!

கள்ளுண்ட மயக்கமாய்..

அனைத்தும் உன் விருப்பமாய்--

மறு நாள்..

தேவதை போல வந்தாய்!!!

கை மாறின..காதல் சாட்சிகள்..

நினைவுகள் அழிந்தன என்றாய்..

அடி பாவி...

உயிரற்ற பொருள் கை மாற்றி..

உயிர் பறித்து போனாய்..

"மறந்து விடு" முதல் முறை வசியமற்ற உண்மை குரலில்........

வருத்த படுகிறேன்..

"இன்றும்" நிறைவேற்ற முடியாததால்!!!!


Thursday, 21 October 2010

மனம்..மணம்

அன்று ..

நீ ஆற்றங்கரையில்..வீசியெறிந்த..

சோப்பு உறையில்..இன்றும் முகர்கிறேன்..உன் விரல் மணத்தை!!


காய்ந்து..

மணம் போய்விட்டதென நீ தூக்கியெறிந்த ..

மல்லி பூவில்..

மாதம் கழித்தும் போக வில்லை உன் கூந்தல் வாசம்..!!


நீ விட்டெறிந்த ..

மிட்டாயற்ற வெற்று உறைதான்..

ஆயினும்..அதனை சுற்றும் ஆயிரமாயிரம்..

என் காதல்மன எறும்புகள்..!!


நீ வெறுப்புடன்..

விட்டு போன வார் அறுந்த செருப்பு..

வாசனை திரவியங்களுக்கு மத்தியில் ..என் அலமாரியில்!!


இப்படி..

நினைவுகள் போதுமென..

நிஜத்தில் வேறு மணம் முடித்தாய்..

என் மனம் ஒடித்தாய்!!


நீ தொட்ட.. "அஃகிறினை"யெல்லாம்..

மணக்கிறதடி..

உனை தொட்ட என் மனம்?

பெண்

உலகத்தின்

சுழற்சி தொடக்கம்...

ஆசை...

வார்த்தையின் முழு அர்த்தம்...!

அன்பு..

இவர்களிடத்தில் தொடக்கம்..

ஆறாம் அறிவு..

ஆதாமிற்கு இல்லை..ஏவாளிடமே..!

தியாகம்..

துணிவு..

கருனை..

பெண்!!!

காந்தி.. மகாத்மா...

மறைத்து கொண்டு கஸ்தூரி பாய்!!

வறுமையில்..வாடாத தமிழ்..

பாரதி!!!!

தூரிகையாய்...செல்லம்மா!!

கவிஞர்கள்..

பெண்களின் கண்ணிமைப்பில்.......

பெண்..

ஆக்கம்..

போர்களின் தொடக்கம்...

பெண்..

பொறுமை..

நகரை அழிக்கும் கோபம்...

பெண்..

அன்பு..

அரசழிக்கும் ஆணவம்...

பெண்..

மோகம்..

கொலை செய்யும் காமம்...

பெண்..

காதல்..

கல்லறையில் பலர்...

பெண்..

விவேகம்..

விண்ணில்பறக்கும் வீரம்....

ஆக்கம்.... அழிவு..

இன்பம்..துன்பம்..

காதல்..சாதல்..

மோகம்..காமம்..

தொடக்கம்.. முடிவு..

உலகத்தில்

பெண்கள்....

பெண்ணிடத்தில்..

உலகம்....

பெண்ணே.... உலகம்!