Tuesday, 31 January 2012

நிலா இரவுகள்...

துரத்தி பிடித்த நிலா நாட்கள்..

நிலா கண்டுபிடிகாதிருக்க ஓடி ஒளிந்த மர இருட்டுதினங்கள்..

நான் பிடித்த நிலா அழகா.. நீ பிடித்த நிலா அழகா..

முற்றத்தில் முற்றுபெறாத நிலா சண்டைகள்..

முழு நிலா முன்னிரவில்..

முன் நீண்டிருக்கும் நிழல் துரத்தும் விளையாட்டு

உன் நிழல் நான் மிதிக்க ..

என் நிழல் நீ மிதிக்க.. துரத்திய ஓட்டதினங்கள்..

கூட்டாளிகள் தூங்கப்போன பின்..

என் தலை நிழல் மிதிக்க நானே முயன்ற முட்டாள்சுகங்கள்..

வால் கடிக்கும் நாய் போல..

அலை அழிக்காத மணல் கோட்டைகள்

மனதில் வசிக்கும் வாச நினைவுகள்..

பத்தை தாண்டிய..

பருவத்தில்.. நிலா காய ஆற்று மணலில்

கட்டி புரண்ட கபடியாட்டம்..

பதினைந்தின் .. பருவத்தில்

அதே முழு நிலா விடுமுறையாயின்..

அதிக கொண்டாட்டம்.. நடு நிசி வரை கிரிக்கெட்

கல்லூரிபருவம்..

முழு நிலவும்..

ஆற்று திருவிழாவும்..

வண்ண தாவணி கூட்டம்

கருப்பு வெள்ளை இரவுகளை கலராக்கிய நிலாக்கள்

அழகிய நிலாவுடன்..

ஆற்று மணலில்..

காதல் கன்னியுடன்

கரம் கோர்த்து நடந்தது ..

ஒட்டிய மணலும்.. தட்டிய நாட்களும்

போகாமலே நினைவுகளாய் ஒரு துளி கண்ணீரோடு!!

இதோ மொட்டை மாடியில்

தேயும் இளமையுடன்..

தேய்ந்து வளரும் நிலாவை ரசிக்க இயலாமல்!!!

Friday, 27 January 2012

நிலா..இரவுகள்

துரத்தி பிடித்த நிலா நாட்கள்..
நிலா கண்டுபிடிகாதிருக்க ஓடி ஒளிந்த மர இருட்டுதினங்கள்..
நான் பிடித்த நிலா அழகா.. நீ பிடித்த நிலா அழகா..
முற்றத்தில் முற்றுபெறாத நிலா சண்டைகள்..
முழு நிலா முன்னிரவில்..
முன் நீண்டிருக்கும் நிழல் துரத்தும் விளையாட்டு
உன் நிழல் நான் மிதிக்க ..
என் நிழல் நீ மிதிக்க.. துரத்திய ஓட்டதினங்கள்..
கூட்டாளிகள் தூங்கப்போன பின்..
என் தலை நிழல் மிதிக்க நானே முயன்ற முட்டாள்சுகங்கள்..
வால் கடிக்கும் நாய் போல..
அலை அழிக்காத மணல் கோட்டைகள்
மனதில் வசிக்கும் வாச நினைவுகள்..

Sunday, 8 January 2012

உறக்கம் கொல்லும் உன்மத்த காதல்...

உறக்கத்தை பிடித்து நிறுத்திவைக்கிறது..

உன்மத்த நிலை அடைந்த காதல் நினைவுகள்..


இமை திறந்தும்..

இமை மூடியும்..

மறையா உருவங்களாய்.. நாம் உலவிய தினங்கள்


சிறு தூறல்..

சில்லென்ற காற்று காலத்தில்

சிக்கனமாய் சிரித்து அறிமுகமானது


நல்லதொரு நட்பு வட்டம்

நாட்கள் சிலவற்றில் நீயும்


பெண்ணென்று பிரித்திரா தோழமையில்..

பெண்தான் என பிரிந்து நின்றவள்


கண்ணியத்தில் கட்டுகுலையாதவனை

கண்ணசைவில் கன்னியவனாய்..


திகட்டாத நட்பு விருந்தில்

திகிலூட்டும் காதல் ரசம் தந்திட்டாய்


அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும்

ஆசை பார்வைகளும்

இதழ் சுழிப்புகளும்

ஈரக்காதல் விழிகளும்

உறக்கம் கொன்ற உள்ளுணர்வுகள்..

உந்தி தள்ள ...


காற்றும் மழையும் காதல் கொள்ளும் நாளில்

கனியவள் கரம்பிடித்து உறைத்ததென் ஆசையை


எனை பொசுக்கிய அதே புன்னகையை

ஏமாற்றம் தருவதற்கும் முன்னோட்டமாய்


வெடியென சிரித்தாய்..

இடிச்சத்ததில் நல்ல வேளை கரைந்து போயிற்று..


கன்னிகள் வீழ்த்தாத எனை

கண்னிமை கன்னி வைத்து வீழ்த்தும் வேகத்திலிருந்தாய்...வென்றாய்


சடுகுடு போல சதிராடினாய்

சத்தமின்றி சிதறினேன்..


கண்ணிமை தாண்டி கரைஉடைத்து கண்ணீர்..

கார்மழை கன்னத்தில் வழிய ஆண்மை காக்கப்பட்டது..


சின்னாபின்ன நெஞ்சம் மறைத்து

சின்னதாய் முறுவலித்து கரம் குலுக்கி

உன் புன்னகை முகம் நெஞ்சில் நிறைத்து

விலகும் நேரமும் கன்னம் முழுதும் மழை கண்ணீர் மறைத்து


தொலைதூரத்திலே கடந்து

அரிதாய் புன்னகைத்து

காலம் கடந்து.. நட்பின் வற்புறுத்தலால்

நல் நண்பனாய் வந்தமர்ந்து..

வள்ளுவன் வாசுகியாய் வாழ வாழ்த்து சொல்லி

விலகி வருகையில் என் கண்ணோர முத்தின் அர்த்தம் தெரியும்..


உன் கண்னோரத்திலும் முத்து..

வியர்வையா?

கல்யாண வேள்வி புகையோ?

இல்லை...?????

எண்ணி எண்ணி உறக்கம் கொல்லுகிறது..

உன்மத்த நிலையடைந்த காதல்!!!!


Monday, 2 January 2012

2012 ஆண்டே வா..

புத்தாண்டு..

புதிதாய் என்ன தருவாய்..?

இருப்பதை இழக்காமல் இருப்போமா??

கூடங்குளம்..

ஆபத்தில்லாமல் அமையுமா?

பிரச்சினை இலாத பெரியாறு தண்ணி கிட்டுமா?

கண்காணிப்பில்லா சுதந்திரம் அடைவானா ஈழதமிழன்?

உண்மையான சமச்சீர் கல்வி தொடங்குமா?

இருக்கின்ற மருத்துவமனைகள் முதலில் சீர்படுமா?

சாலை வழிதடம் சரிபடுமா?

விபத்திலா விமான பயணங்கள் அமைந்திடுமா?

உரிமை கேட்கும் ஒவ்வொரு மனிதனும் கடமை புரிவானா??

தானே வோடு போகட்டும் இவ்வருடம்..

நல்லதை தந்திடு .. புத்தாண்டே நன்மையை தந்திடு

வருக வருக 2012ம் ஆண்டே வருக வருக!!