Friday, 30 July 2010

கனவு....

கண்கள் திறந்த பின்னும்..
தூக்கம் கலைந்த பின்னும்..
கலையாத கனவு அவள்..
என் காதலி!

காதல் பிழை...!

காதலித்த நேரத்தில்..
எழுதிய கவிதையனைத்திலும்..
எழுத்துப்பிழை தெரிந்தது..
திருமணத்திற்கு பின் படித்த போது..!
எங்களின் மனதை போலவே..!


Thursday, 29 July 2010

என் காதல்..

உன் மீது ...
நான் கொண்ட காதல்..
நேற்றை விட இன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டதடி..
ஆனாலும்..நாளை நான் கொள்ளும்.. காதலை..விட
குறைவுதான் போல..
போடி..என் பொழுதத்தனையும்..
உனை காதல் செய்வதிலியே..கழிந்துவிடும்!

எந்தன் கற்பனை குதிரை....!

யாராவது வாருங்கள்..
என் கற்பனை குதிரயை எழுப்பி தர..
சில பல கவிதை கிறுக்கிய செருக்கில்..
உண்டு களித்து உறங்கி கிடக்கிறது...
யாரவது வாருங்கள்..எழுப்பி தர!
என் கையிருப்பு கவிதைகள்..கரைந்தபின்னும்..
எழும்ப மறுக்கிறது..என் குதிரை
என் நண்பர்கள்..ஓடி கொண்டிருக்கையில்
நகர இயலாமல்.. நான்!
யாரவது வாருங்கள் எழுப்பி தர
உறங்கி கிடக்கிறதா உயிரற்று கிடக்கிறதா?
பார்த்து சொல்லுங்களேன்..

காதலி..மனைவியான பின்..
மறந்து விட்டது..இந்த கலை!


Saturday, 24 July 2010

பார்வைகள்

ஒரப்பார்வை பார்த்து..
என் உயிர் குடித்தது போதும்!
கடைக்கண் பார்வையில்
எனை கடைந்தது போதும்!
நேர் பார்வையில்..
என் நெஞ்சு பிளந்தது போதும்!
கீழ் பார்வையிலே..
நான் கிளர்ந்தது போதும்!
நீ தேடும் பார்வையில்தானடி..
நான் தொலைந்தே போனேன்..!

இன்னும் எனை பார்த்து...
ஏன் பெண்ணே ... கொல்கிறாய்!!
இப்படி....
உன் பார்வையில் மட்டும் ஏனடி....
ஓராயிரம் அர்த்தங்கள்!
அதில் ஓர் அர்த்தமாய்...
என் காதல் இராதா என கனவு காண்கிறேனடி!!!!

Friday, 23 July 2010

ஒரு ஊமை காதல்...

எனை நீ கடக்கையில்...
கண்ணதாசனை; வைரமுத்து.- வார்த்தைகளை..
உயிரில் நிரப்பி..உயிர்ப்பித்தேன்..!

நடு இரவில் விழித்து...
கிறுக்கிய என் உளறல்களை...
பேருந்தில்..உன் காதருகில் தினமும்!

நேருக்கு நேர்...
இமைகள் படபடப்பில்..
இதயதுடிப்பில் தடுமாற்றம்!

விரலசைப்பிற்கும்..
உதடு முறுவலிப்பிற்காகவும்..
டிக்கெட் கடத்தும் வரிசையில்...உன்னருகில்!

ஒவ்வொரு முறையும்..
என் கவிதைக்கு ..பரிசாய்
சிறு பார்வை..புன்முறுவல்..!

வருடம்..கடந்தன..
என் விரல்களும் வலித்தன...
காதருகே துணிந்து சொன்னேன்...
-மூன்று வார்தையை...

அதே தலை அசைவு..
சிறு முறுவல்..
என் தூக்கம் தொலைந்ததடி!

உன் பேருந்து நிறுத்ததில்..
காத்திருந்து அழைத்தேன்..
திரும்ப வில்லை..காத்திருந்தேன்..
நீ வருகையில்..மீண்டும் அழைத்தேன்..
திரும்பவில்லை..!!!?

உன் தோழி திரும்பினாள்..
உரைத்தாள்..
காதும்..உதடும்..ஊமையாய்...என் காதலும்!

கனவுலகம்...

கனவுகள்..
எனக்கு விருப்பமிலாது போயிற்று!

கனவுகள்.....
கட்டுப்பட மறுப்பவை...
சில நேரம்..
உள் மனதை துகிலுறியும்...
அந்தரங்க..
அபிலாசைகள் அப்பட்டமாகும்...
உண்மையான..
உள்ள ஆசைகள் காட்சிகளாகும்!!

சில நேரம்
நடக்க கூடாதவை நடக்கும்..
என்றும்
நடக்க இயலாதவையும்..நிகழும்...
உலக அழகிகளை..
உள்ளறையில் நிர்வாணமாக்கும்....
நல்லவர்கள்..
என நம்புகிறவர்களை சந்தேகிக்கும்...

துரோகிகளை..
தோளில் சேர்க்கும்..

இதலால்..
எனக்கு விருப்பமில்லை........கனவுகளில்...

விழி திறந்தும்.....
பயணிக்கும் கனவுலகம்...
நினைவுகளில்..
வாழவே நான் விரும்புகிறேன்..!

கனவின் கடவுளை..
அங்கே ..கைது செய்யுங்கள்..!

குற்றங்கள் குறையும்...
இங்கே ..பூமியில்!!

கிறுக்கல்..தொடரும்..

என்னை களையெடுப்பாய்...
கட்டுபாட்டை..கண்ணுக்கும் வரசெய்வாய்.!
இழந்தவற்றை,,மீட்டெடுக்க வழி சொல்வாய்
இல்லாமல் போகும் எனை..இல்லாலாகி மீட்டெடுப்பாய்..!

இவள்....
துவைத்து துவைத்து..அழுக்கு எடுப்பாள்..!!
என் மனதை மட்டும் அழுக்காக்குவாள்.!!!

அவள் பிழிகின்ற துணிகளோடு....
என் இதயமும்!!
ஈரம் மறந்த துணிகளை போல்...
அவள் இதயமும்..
எனை ஏறுடுக்காமல் செல்லும் போது!!!

Wednesday, 21 July 2010

அவள் பேரழகி!!!!

உனை காண்பதற்காக..
நான் காத்திருக்கவில்லை..
உன் வழியில் கடக்க
என் வழி விட்டு மாற வில்லையடி!

ஆனாலும்....
உனை சந்திக்கும் அந்த கண நேரம்...
என் விழிகள்..விரிந்து நிலைத்து விடுகின்றன!

தினமும் ...
எனை நான் கண்ணாடியில் உணர்வதால்..
காதல் பிச்சை கேட்க விரும்பவில்லை!!

என்னுள் காதலன்....
கண்ணாடியில் விழிக்கும் போதெல்லாம்...
எரிந்து போகிறான்.....

ஆனால்...
உன் நினைவுகளோ.....
அவனை ஃபீனிக்ஸ் பறவையாய்..மாற்றிவிடுகின்றன!

காதலுக்கு கண்ணில்லை...
எனை காணாதவர்கள் சொன்னது!
எனை அருகில் கண்டால்...
நீ என்ன சொல்வாயோ?????

என் உள்ளத்தின்..அழகை.....
உனக்கு உணர்த்த ......
உன் அழகில் கொஞ்சமாவது...
எனக்கு கிடைத்திருக்கலாம்...!!!!!!!

மெழுகுவர்த்..தீ

குகைக்குள்ளும்....
உதிக்கின்ற சூரியன்கள்!

உனை ஏற்றுகிற
ஒவ்வொரு கரங்களும்.....
ஒரு வகையில் உனைபோலவே

மின் அமர்ந்த ஓர் இரவில்..
உனை ஏற்றி படிக்கச்செய்த அப்பா..
உனை போல எங்களுக்காக..தேய்ந்து...

உன் வெளிச்சத்தில்...
உணவருந்தும் போது..
உருக்குலையும் போதும்..அழகாய் அம்மா..
உந்தன் அழகான ஒளி போல!!

உன் ஒளியில்..
ஒருங்கினைந்து தளர்ந்த போது..
அதிகம் பளபளத்தன..காமம் வ்டிந்த பின்னும்...
காதல் வடியா..விழிகள்!!

பயணம் தொடங்கி..
மரணிக்கும் வரை...
வெளிச்சம் மட்டுமே தரும் நீ.....
ஏனோ விட்டில் பூச்சிகளுக்கு மட்டும் எமனாய்???

இப்படியே..முடித்து விட்டால்...
விட்டில் பூச்சி போலத்தான் இந்த கவிதையும்!!

பகவத் கீதை படிப்பதில்லை....
நீ தரும் படிப்பினையால்.....
கடமையை செய்வாய்...
கருகும் வரை...
கற்றுக்கொள்வோம்..பிறப்பின் நோக்கமதை!!

Monday, 19 July 2010

கடற்கரையில்..ஒரு நாள்

ஒரு நாள்..அந்தி..
சுனாமி மறந்து நான்!
செந்நண்டுகள்..ஒரு வட்டம் விட்டு..
எனை சுற்றி விளையாட..

சுனாமி அலை தொடும் தூரத்தில்..நான்!!

கடல் அலையாய்..கண்கள் அலை பாய...
உணர்ச்சிகள் முந்த படகோரத்தில்---அவர்கள்!!!

பார்க்கும் உணர்ச்சியை வென்று..
கடலை நோக்கினேன்..

கூட்டமாய் யுவ யுவதிகள் கூட்டம்.....

ஒருவர் கரம் ஒருவர் பற்றி கடல் அலையோடு...
போட்டி!!!

கொஞ்சம் பொறாமையும்..ஆற்றாமையும்..
கலந்து ஒரு பெருமூச்சு.........

சில நிமிடம்..காட்சிகள் கலைந்தன..
கரங்கள் மாறி..மாறி பற்றின....!

என்ன கலாச்சாரம்..இது என அதிர்ந்தேன்..
மனதால் சபித்தேன்...

தொடர்ந்து கரங்கள் மாறி .. மாறி பற்றின..
கடல் அலையோடு போட்டியிட்டது..இளமை..

அதிர்ந்திருந்த என் அறிவு..
விழித்துக்கொண்டது..!!!

பாலுணர்ச்சிகள்..மறந்து..
நட்புணர்வு ஓங்கியிருந்த அவர்களின் நிலை..
எனை வெட்கமடைய வைத்தது...

பெண்களின் கண் நோக்கி...
பேச இயலாத..எனை போன்றோரின்..

கண்ணுக்கும்...மனதுக்கும்..
உடன் புரியா உணர்வுகள் அது..

ஆண்..பெண்..அழகிய நட்பு!!

மழைக்காலம்...2

...
...
உருவாகியது..வெற்றிடம்
என் இதயத்தில்...
புயலென மையம்...கொண்டாள்..
என் மனதில்...!!

மறு நாள்...

மனதிற்கினிய..மழை தூறல்
காலை தொடும்..கடல் அலைகள்.......
கடல் அலைகளாய்..என் கண்கள்
ஓயாமல்..அவள் உருவத்தை தேடி!!

ஓங்கி உயரும் அலைகளும்..
பணிந்தன!- அவள் பாதம் தொட..
அவள் கால்கள் .. பின்னின.....
எனை கடக்கையில்..!!

என்னிடத்தில் தயக்கமான..
புன்னகை--- அப்பூவை நோக்கி
ஒரு கோடி பூக்களின்..அபிசேகம்
என் மீது..பதில் புன்னகை!

பார்வை பரிமாறல்களின் ....பிரதிபலிப்பு
பளீர்மின்னல்கள்--வானத்தில்
எங்கள் இதயங்களின் மோதல்
இடிச்சத்தமாய்---மேகத்தில்

தயக்கமாய் பேச முற்பட்டேன்
வலுத்தது--மழை..
தன் குடையை..தன்னோடு
எனக்கும் - அவள்..

இருவருமே ..நனைந்தோம்..
நடுவில் குடை -- இடைவெளி எங்களுக்குள்..
வெட்கமாய் அவளும்..
மௌனமாய் நானும்-- சிரிப்பு..

மழை முழுதும்..நின்ற பின்னும்..
விரித்த நிலையிலே..குடை......
தோள்கள்..இடி பட நாங்கள்!!!

கண் விழித்தேன்..கூரை ஓட்டை வழியே..
வழிந்தது..மழை நீர்......ஓ...
இது ஒரு மழை கால கனவா!!!!???


Sunday, 18 July 2010

மழைக்காலம்...

பகலும் இரவும்..
சந்திக்கும்..அந்தி நேரம்
தேகம் சிலிர்க்கும்..
இதமான மழைதூறல்..

வர்ண ஜாலங்கள் காட்டும்..
வானவில் தெரிந்தது வானத்தில்..
வசமிழந்து ... நின்றேன்....
பூமியில் உதித்த வானவில்லை கண்டு..!

பளீர் மின்னல்..
என் இதயத்தி.......ல்
புன்னகைத்த அவள் பார்வை!

மழை தூறிய..
மண் வாசத்தை மறுத்தது நாசி.!!?
எனை கடந்த அவளின் வாசத்தால்..!

உருவாகியது..வெற்றிடம்
என் இதயத்தில்...
புயலென மையம்...கொண்டாள்..
என் மனதில்...!!

மறு நாள்...
காலை தொடும்..கடல் அலைகள்.......

தொடரும்...


மழை குளிர்...மோக வெப்பம்..

அவளை மழை துளிகள்...
நனைத்தது..
குளிர்கிறது அவளுக்கு..
என்னுள்ளோ..வெப்பம்..!

எந்தன் வெப்பத்தில்..
குளிர் காயடி பெண்ணே!!...
.... ..... ......
.........
இப்பொழுது எனக்கு..
குளிர்கிறது பெண்ணே...
மீண்டும் குளிர்காய்வோமா!!!!!

உன் கண்கள்..என் கனவுகள்

கண்களில்..
கனவுகள்...!
உனது விழிகளால்..
என் இரவின் வழி முழுதும்..!!

எனது இரவுகள்
விரைவில் தொடங்கி-தாமதமாய் முடிகிறது??

எனது இமைகள்..
இணைந்த பின்..
இதமாய் வந்து..
அதனுள் ஒட்டிக்கொள்ளும்..

உந்தன்...கண் மலர்களால்!!!

ஆ(நா)ண்

உயிர்பெற்ற..கருவறை சுவரை..
எட்டி உதைத்தேன்..!
உதிரம் முறித்து...பால் தந்த
மார்பினை கடித்தேன்..!
சிறு வயதில்..சண்டையில்..
சகோதரிகளை அடித்தேன்..!
வாலிப வயதில்...பெண்களை
கண்ணால் அடித்தேன்...!
காதலித்து கரம்பிடித்தவளை..
கணவனாய் கன்னத்தில் அடித்தேன்..!
நா(ஆ)ண்..
என்ற எண்ணம்..
அதை எப்பொழுது அழிப்பேன்..!!!!

Saturday, 17 July 2010

கிறுக்கல்....

உச்சி வெயிலில்..
காத்திருந்தேன்...
சூரியன்..சுடவில்லை..
உன் உதாசீனம்..சுட்டது!!

உறையும்..மார்கழி குளிர்,,
உன் படர்ந்து விரியும்..கோலத்தில்..
உனை மயக்க ஒற்றை பூவுடன்..காத்திருந்தேன்..
சிக்கல் கோலமிட்டாய்..சிதைத்துவிட்டாய்..கனவை..காதலை!!

Friday, 16 July 2010

நாமும்..மரணமும்..

உன்னில்..நானும்..
என்னில்.. நீயும்..
எது நீ..எது நான்..
எது உன் ஆசை..எது என் விருப்பம்..
புவியில்..விழும்..நிழல்..உனதா..எனதா..??

இப்படி..நாமே..குழம்பியிருக்க
காலன்..வந்து
என் உயிரை..மட்டும் எப்படி பிரித்தறிவான்..

போடி...எனக்காய்..நீ சேர்த்து வைத்த..கண்ணீர்..
எல்லாம் வீணாய் ..போகும்....

பிரம்மன்..கணக்கு பொய்க்க..
வேண்டாம்..போ....!!

உனக்கு ஒரு நிமிடம்..முன்..
இறப்பேன்..
ஒரு நிமிடம்..தாண்டி..
தாமதித்து...விடாதே..
தவித்து..போவேன்!

Wednesday, 14 July 2010

காலம்..குரு..அனுபவம்..பாடம்...!

காலம் ஒரு குரு..
அனுபவங்கள் அதன் வழியில் பாடமாய்..
கற்க மறுதலித்த ..
முட்டாள் மாணவனாய்...மனம்!!?

இராஜ வாசம்..சில தினம்..
அஞ்ஞான வாசம்.. சில தினம்..

அமைதியாய்..புன்னகையாய்..ஓரிரு நாள்..
கோபமாய்..கொந்தளிப்பாய்..தினம்..

மாலை..மரியாதை...
புறக்கனிப்பு...அவமானம்...

பொறுப்புகளும்...பதவியும்...
வெறும் பலமற்ற பார்வையாளனாய் மட்டும்..

ஊதியமற்ற.... உழைப்பு....
உழைப்பற்ற .. ஊதியம்...

பணிவுடன்.. ஞான செறுக்கு...
பணிவு மறந்த கிறுக்கு....

பயமற்ற.. வீரம்...
வீரமிழந்த ...பயம்..

நிரந்தரமற்று..இருப்பதே...
நிரந்தரமாய்..

மாற்றங்கள்... மட்டுமே..
மாற்றமில்லாமல்..

சூரியன்.. நிலவும்..
வானில்.. நிரந்தரம்..
கண்ணில் தெரியும் மாற்றம்..
வளர் பிறை..தேய்பிறை..
முழு நிலவு..நிலவற்ற வானம்..!!

விடியல்..முற்பகல்..
நண்பகல்..அஸ்தமனம்..!!

விதையில் தொடங்கி...
விதைகளாய்..மாறும் வரை..
மாற்றங்கள்..மரத்திலும்...!!

மணிமகுடம்..தரித்த..உண்மை..
மகனை அறியாத...வெட்டியானாய்...அதே உண்மை....!!

அஸ்தினாபுரத்து..ஆண்மை..
ஆண்மையற்ற..பேடியாய்..ஒரு வருடம்..!!

மனமே..
காலம் நிற்பதில்லை..
ஓடிக்கொண்டேயிரு..

நாளை...
நன்மையே..இலக்கு..
இன்று...
எது நடப்பினும்...பாடம்...
நேற்று..
புலம்பியதை..புறம் தள்ளு...
தேடிப்பார்..ஏதோ ஓர் படிப்பினையை..

கை பிரம்பு...
பார்வையற்றவரின் பலம்..
அனுபவம்...
மனிதர்களுக்கு..!!

காலமே..குருவாய்..
அனுபவமே பாடமாய்..
மனமே..மாறுவாய்..சீடனாய்..!!!!

காதலாய் ..கசிகிறேன்....!!!!

பல பெண்கள்..
எனை சபலபடுத்தி இருக்கிறார்கள்..
சலனப்படுத்தியது.. நீ ஒருத்திதான்!!!

ஆயிரம் பெண்களை..
அலட்சியபடுத்தி கடந்த்திருக்கேன்..!
என் அடி மனதின் ஆழம் வரை..
ஆட்டம் கண்டது நீ எனை கடந்த போதுதான்!!

நான் உனை அடைய முடியாது என்றாலும்...
கவலையில்லை...கண்ணே...!
ஆனால் உந்தன் காதலனாய்..இருந்தேன்..
என்ற எண்ணமே..போதும்..
என்னை காதலித்துவிடு...பெண்ணே!!!

உனை கண்டவுடன்..
காதல் கொள்ளவில்லை..
உனை காணத போதுதானே..
காதல் வந்தது..!!!
அதலால்..இப்பொழுது..
வர மறுத்தாய்.. எனை காண ...மறுத்தாய்...
மறந்து விட்டாயோ..
உனை காணமல் காதல்..இருக்கும்..
ஆனால் என் உயிர் இருக்காது என்பதை!!!!!

Tuesday, 13 July 2010

என் நிழலும்..நீயும்..

ஒரு நொடி ..
எனை நீ கடப்பதற்காக..
ஒரு நாள் முழுதும்..காத்திருந்தேன்..
நீ எனை கடந்த பின்..
என் நிழல் கூட காத்திருக்கவில்லை..
அதுவும்..என் மனம் போலே..உந்தன் பின்னே!!!
முதலில்..
என் மனதை..என்னிடம்..இருந்து பிரித்தாய்..
என் எண்ணங்களை..உனதாக்கினாய்..
உனக்கானாதாய்..மட்டுமே மாற்றினாய்..
நினைவுகள் முழுதும்..நீ மட்டுமானாய்..
இன்று..
என் நிழல் பறித்தாய்....
ஏனோ...உயிரை ...விட்டு வைத்தாய்..
அதுவும்..உனை பற்றி..பற்றற்று போயிற்று..
நான் இருந்ததன் அடையாளாமாய்..
இந்த கவிதையாவது..இருந்து விட்டு போகட்டுமே..!!!!

காதல் கிறுக்கல்கள்....4

சூர்ய காந்தியும்..
வடக்கு நோக்கும்..
என்னவள் அதிகாலையில்..
அங்கிருந்து..வரும்போது..மட்டும்..!

மறந்தும் மலர் கண்காட்சிக்கு...
வந்து விடாதே..
மற்றவர்கள்..மலரை காண
மறந்து விடுவார்கள்..!!!!

படுக்கையறையின்...
பாவைகள் அல்ல பெண்கள்..
உன்னால் பாதிப்புக்குள்ளான போதுதான்..புரிந்ததடி!!!!

சூழ் நிலை அமைந்தால் ..உயிர்ப்புக் கொள்ளும்..
உயிர் கொள்ளி..கிருமிதான் காதலும்...

காதல் கிறுக்கல்கள்...3

அன்பே...
சில மணிதுளிகள்....
உனை காண..
பல மணி நேரம் பயணிக்கிறேன்.....

ஒரு சில நிமிடம்..
உன்னுடன் பேச..
ஒவ்வொரு நாளும்..யோசிக்கிறேன்.....

Saturday, 10 July 2010

காதல் கிறுக்கல்கள்....2

என்னருகில்
நீ இருந்தால்....
உலக அழகிகள்...உருகி நின்றாலும்...
உன்னிடத்தில் மட்டும் என் மனம்..!!

நீ இல்லை என்றால்...
உள்ளூர் அழகியிடமே..
வெறியாட்டம் போடும்... களியாட்டம் ஆடும்..
என் கள்ள மனம்...!!!!

காதல் கிறுக்கல்கள்....

கண்கள் மறைக்கும்..
அவளை பிரதிபலிக்கா...
உருவங்களை..!

நாசிகள் மறுக்கும்..
அவள் வாசம் ..
இலா சுவாசத்தை..!

மனம் வெறுக்கிறது....
அவளை பிரிந்திருக்கும்..
என்னை..!

Thursday, 8 July 2010

அன்னை தெரசா... அருள் மொழி!!!

இறைவா!
என்னை அமைதியின் வடிவாய் ஆக்கியருளும்..
பகையுள்ள இடத்தில் அன்பையும்..,
தவறுள்ள இடத்தில் மன்னிப்பையும்..,
பிளவுள்ள இடத்தில் ஒற்றுமையையும்..,
பிழையுள்ள இடத்தில் உண்மையையும்..,
ஐயமுள்ள இடத்தில் உறுதியையும்..,
விரக்தியுள்ள இடத்தில் நம்பிக்கையையும்..,
இருள் உள்ள இடத்தில் ஒளியையும்..,
மருளுள்ள இடத்தில் மகிழ்ச்சியையும்..,

தருவாய்.......இறைவா!
- அன்னை தெரசா

Tuesday, 6 July 2010

என் சுவாசக்காற்றே...

எலும்பினை.. ஊடுருவும்
குளிர் காற்று...
மணல் அள்ளி வீசும்..
மணற்புயற் காற்று..
வியர்வையோடு உயிரயையும் வடிக்கும்..
வெப்பக்காற்று..

எதனையும் விலக்க வில்லை ...
நான்????
சுவாசிக்கும் காற்று என்பதால் அல்ல!!
அது..
உன் சுவாசம் கலந்த காற்று என்பதால்!!!

ஒவ்வொரு முறையும்..
ஒவ்வொரு அணுவிலும் நிரப்பி கொள்கிறேன்..
உன் சுவாசத்தை!!!

உனை தொட்ட காற்று..
கடல் கடந்து வரும் என
சுவாசித்தலை அதிகப்படுத்தினேன்!!

எனை சுடும் சூரியனை...
கோலமிடும் கோலமயிலை..
இதமாய் வருடி.....பிரிந்திருக்கும் எனை
கோபமாய் சுடுகிறான்..என்றே எண்ணுகிறேன்!!!

என் அன்பே...
வெயிலில்..வெளியில் வா...
உன் வியர்வை துளி குடித்த பிறகாவது..
இங்கு மழைதுளி பொழியட்டும்...
இந்த மேகங்கள்!!!


Monday, 5 July 2010

முத்தங்கள்

என்னவளே..
எதிர்பாராத நேரத்தில் முத்தம்..
ஒன்று கொடு!
ஏங்குகின்ற போதும்..
ஏமாற்றம் தந்து விடு..!!
பலமுறை கெஞ்சிய பின்..
பலமாய் ஒன்று கொடு!!!
ன்னை பணிய வைக்க
பரிசாக ஒன்று கொடு!!!
முத்தம் தருவதற்கே..
யோசிக்கிறாய்....நீ!!!
யோசிக்காமல்...
மொத்தமும் தந்துவிட்டேன் நான்!!!!!!!


நினைவுகள்.....சுகம்..2

நிஜமாய்...
அவனது கரம்பிடித்தாய்!!!!!!!
உன் நிழலுக்கு..ஏன்..
எனை காவல் வைத்தாய்!
அந்த நினைவை....
அந்த தகிப்பை..
தண்ணீருள் குறைக்க நினைத்தேன்...
தாமரையாய் மலர்ந்திருந்தாய்..!!!
விப்பை....
தண்ணியில் ..மறக்க நினைத்தேன்....
கோப்பையின் உரசல்களில்- உந்தன்
சினுங்களை ஒளித்து வைத்தாய்..
லை உச்சியில்...
உரு மாற போனேன்..!
சில்லென்ற காற்றில்.......
ஈர முத்தத்தை...அனுப்பிவைத்தாய்!!!!!!

நீ கலந்திருந்த...
என் இரத்தத்தை.. கரைக்க நினைத்தேன்..
வியர்வையில்..கலைந்த..
உன் நெற்றி பொட்டாய்..நினைவுக்கு வந்தது!!!

உன்னுடன் வாழ வழியும் இல்லை..
உன் நினைவுகளை அழிக்கவும் இயல வில்லை..!!!

என் நிழலை
விலக்கி விட்டேன்...
உன் நினைவுகளின்....
நிழலாய் நான் மாறி விட்டேன்!!!!

நினைவுகளில்..
வாழ்வது...மிகவும் இனியது..
நிஜத்தில் வாழ்வதை விட!!!!!!


Sunday, 4 July 2010

நினைவுகள்.....சுகம்

உனை பார்ப்பதில்..தான்
என் கண்கள் காதல் கனவு சுமக்குமென்று
உன் கண்மலர்களை....
சந்திக்காமல் வேறுபக்கம் திரும்பியிருந்தேன்!

ஏனடி..சில்லறையை
சிதறடித்ததுபோல் சிரித்தாய்...
செவிகள் செவ்வனே செய்தது.........
மூளையை அடைந்தது காதல் அலைகள்...!

கண் திருப்பி..
செவி அடைத்து விலகியிருந்தேன்...
எனை நீ கடக்கையில்....அடித்த காற்று..
நாசிக்கு சொன்னது நின் மணமென்று...
நில்லாது துடித்தது என் மனமது!!

நீ அருகேயே இலாத.....
மொட்டை மாடிதான்.....
வெண்ணிலவு வெட்கமின்றி...
உன் முகமூடியனிந்து...
அங்கே நீ சிரித்தவுடன்...
சிதறியவை விண்மீனாய்...வானில்!!!

என் போர்வைக்குள்...
புகுந்து வெளியேற மறுத்தது.....
உனை தொட்டு வந்த காற்று..!

நிலவு, விண்மீனெல்லாம்...மறைந்து..
கரிய மேகம் கடந்தது..... உடன்..
மனதிலாடியது உன் அலைபாயும் கூந்தல்..!!

என் உலகையே...இருட்டாக்கி.....
கண் மூடி இறுகினேன்..
மூடிய விழிக்குள்....
முழுமதி..நின் முகம்..!!!

உனை மறக்க நினைக்கிறேன்...
முயல்கிறேன்....
மறந்து போவதோ..அந்த எண்ணம் மட்டும்தான்!!!

நீ எனை...
விலக்கி விலகி ...போனாய்......
உன் நினைவுகளை..மட்டும்.......ஏன்
விட்டு போனாய்.!!!!

நிஜமாய்...
அவனது கரம்பிடித்தாய்!!!!!!!
உன் நிழலுக்கு..ஏன்..
எனை காவல் வைத்தாய்!

உனை மறக்க.....
தொடரும்.....2!!!!



Saturday, 3 July 2010

தோல்வி சுகம்....

வேறு ஒருத்தியை...
மணம் புரிவேனடி..
நீ குற்ற உணர்ச்சி...
கொள்ளாமலிருக்கும் பொருட்டு!

உண்மை காதலை
உணர்த்திவிட்டேன்...
அவள் திருமணத்திற்கு.
சாட்சி கையெழுத்திட்ட பொழுது..!!!

உனை மனப்பூர்வமாய்..
வாழ்த்த வழியில்லை..பெண்ணே!
உனையடைந்த மனம்..
இன்னும் எனை வந்து சேரவில்லை..அன்பே!!!!!

Thursday, 1 July 2010

பௌர்னமி முழு நிலவும்..அவளும்..

ஏய்..நிலவே..
என்னவள் உறங்கச்சென்றதை
அறிந்த பின்தானே....நீ
தைரியமாய் உலா வருகிறாய்..!

கர்வம் கொள்ளாதே..?
இன்று ஒரு நாள்தான்..
நீ முழு நிலா..!

என் ஆயுள் முழுதும்..
என் வானில் அவள் மட்டும்தான்
முழு நிலா!!!!

ஏமாற்றம்...காதலி

தனிமையில்..
என் முகம் ஏந்திய..
உன் கரங்கள்!
உதடுகள் வலித்த...
உன் முத்தம்!
என் தோள் நனைத்த..
உன் கண்ணீர்!
விலகுகையில் விலக மறுத்த..
உன் விரல்கள்!
இவையனைத்தும் மீறி....
என்னுள் ஏமாற்றம்.........????

பலரின் முன் நீ காட்டும்
பாராமுகம்..!
விழிகளில் கூட நீ அடக்கி வைக்கும்....
பரவசம்...!!!!!