
எழுதிய வரிகளெல்லாம்..ஏவுகனைகளாம்.. சீரி விழுந்த சொற்களெல்லாம்.. வெடித்திட்ட குண்டுகளாம்.. ஆதிசக்தி வணங்குபவனாம்.. பெரியாருக்கே அப்பனாம் பகுத்தறிவில்.. 50 வருடம் கழித்து பெண் அடைந்த உயரம்தனை.. அன்றே பாட்டில் அளவிட்டவன்..
இரத்தல்தான்..புலவன் நிலமையாம்..
ஆளுபவனை எத்திதள்ளிய முதல்வனாம்..
கட்டிய முண்டாசில் கட்டிவைத்திட்ட கனல்குஞ்சாம்
பாரதி என் பாட்டுடை தலைவன்..
உனை முற்றும் அறியாமலே அடிமையானென்..
இன்றும் குறளும் நீயும் அறிவின் களஞ்சியமே..
பாரதி..இந்த பாரின் தீ!!!!!!
