Monday, 16 May 2011

மலர்..கொய்யும் கரங்கள்..


கும்மிருட்டு..

நாய்கள் உலவும் மயானம்

தனிமையாய்..இதை கடக்க தயங்கவில்லை

உனை கடக்கையில்..

உலர்ந்து விடுகிறது நா..

தளர்ந்து விடுகிறது கால்கள்..

இதயத்துடிப்பை தாண்டுகிறது இமைதுடிப்பு..

தயங்கி தயங்கி பார்ப்பேன் சலனமே இல்லை உன்னிடம்!!

ஒரு நாளா.இரு நாளா..

எதிர்வீட்டில் நீ வந்த நாளாய்..

என்னிதயம் உனக்காய் துடிக்க..

வெட்கம் துறந்த மனசு..

உன் வண்டி ஓசையுணர்ந்து..எனை ஜன்னலுக்கு தள்ளும்

ஒரு நொடி கூட திரும்பவில்லை உன் தலை

6 மாதத்தில் மூனு கொலுசு ..

இதை விட அதிகம் சத்தமிடும் மணிகள் இல்லை கடைகளில் ..

நீ வாசல் வரும் நேரம்..பூ பறித்தேன்..

சில மணி நேரம் அதனை தொடுக்கிறேன்..

கை வலிக்க கட்டியது நீ வணங்கும் தெருமுனை பிள்ளையாருக்காய்..

நானாய் வலிய வருதல்..வசதியாயிற்று உனக்கு

என் வாசனையே அறியாதது போல நடிக்கிறாய்..

நீ என் வாசல் வரும் வரை..ஓய்வில்லை

மலர் கொய்யும் கரங்களுக்கு!!

No comments:

Post a Comment