Tuesday, 29 June 2010

ஒரு பூந்தோட்ட மாலை நேரம்...



பூக்கள்..சிரிக்கும்
அந்தி நேரம்
மலர்களை ..ரசிக்கும்
மன நிலையில் நான்!

அன்றும்..

கண்மூடி மல்லாந்திருந்தேன்..
மலர்களின் சுகந்தத்தை அனுபவித்த நிலையில்..!

அணிச்சையாய் கண்விழித்தேன்...?
அங்கு பூக்காத பூவின் வாசம் நுகர்ந்து!!!

என் செவிகளில் சிலிர்ப்பு..
ஒரு ஜோடி கொலுசுகளின் கீர்தனையில்..,
என் விழிகளில் கல்கண்டு..
அந்த தேவதையை..கண்டு!!

உழுது போட்ட நிலம் போலாயிற்று மனது...
அவளது உதட்டோரம் ஏற்பட்ட நகைப்பில்..,
பூந்தோட்டத்தில்..ஒரு குயிலோசை..
அவள் உதடுகள் பேசியது வழி விட சொல்லி!!

பாவி..மலர் பறிக்க வந்தவளாம்...
பறித்து விட்டாள் இப்பாவியின் மனதை!!!
இனி...
பூவோடு பூவாய் தினம் பூத்திருப்பேன்..
பூப்பறிக்க வரும் பூவை எதிர் நோக்கி!!!!!

கோபம்

மிருகம் மனிதனான பின்....
மிச்சமிருக்கும்...எச்சம்!

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.........

உன் கண்களில்..
காந்தம் இல்லை பெண்ணே..!
உன் நடையில்..
நளினம் இல்லை கண்ணே..!
உன் அழகு...
அடிக்குமளவு இல்லை அன்பே..!
உன் குரலில்..
கண்டிப்பாக குயில் இல்லை..
இப்படி..எத்துனை இல்லைகள்...
பெண்ணே...உன்னிடம்..
ஆனாலும்...காதல்..
ஆம்...அது உன்னுடன் மட்டும்தான்!!!

சில கிறுக்கல்கள்

கன நேரம்..
கனவில் வருவாயா..நீ!!
உனக்கு கால் மணி நேரம்..
காஸ்டியும் யோசிக்கிறேன்..


உன் ஓர் பார்வையில்..
ஓரடி பள்ளமடி...
என் உள்ளத்தில்...!!

மாலை நேரம்!

உன் சிரிப்பின் முன்..
சூரியனே சுருண்டுவிட்டான்..
நான் எம்மாத்திரம்??

Sunday, 27 June 2010

வழிகாட்டி..கரங்கள்

பாலைவன பயணத்தில்..
மர நிழல் போலத்தான்..
தொலைதூரபயணத்தில்..
வழிகாட்டிகள்!!
என் பயணத்தில்..
தடம் தெரியாது..தடுமாறிய போது..
வழிகாட்டியாய் நின்றாய்...
நன்றி சொன்னேன்..உயிரற்ற உனக்கு..

ஏனோ உனை..
நட்டு வைத்த கரங்களை..
மறந்து போனேன்!!

கைகள்

Google
கைகள் இரண்டால்...
எஸ்.ராமகிருஷ்ணன்
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்

ப்போதுமே கண்கள் சொல்வதைவிட கைகள் அதிகம் நம் மனநிலையை வெளிப்படுத்துகின்றன. உற்சாகமோ, கோபமோ, கவலையோ, வலியோ, எதுவாயினும் கைகள் உணர்ச்சிமயமாக இயங்குகின்றன. பிடித்தமானவர்களின் கண்களை உற்று நோக்குவதைப்போல கைகளை உற்று நோக்கி இருக்கிறீர்களா? மனிதனது இடையறாத துணை கைகள்தான்!

கைகள், கடவுளைப் பிரார்த்திக்கின்றன. உணவை உண்ணுகின்றன. அடுத்தவனை அடிக்கின்றன. மிரட்டுகின்றன. விருப்பமானவர்களை அன்போடு கட்டிக்கொள்கின்றன. கலைப் பொருட்களைச் செய்கின்றன. இசைக் கருவியை வாசிக்கின்றன. ஓவியம் தீட்டுகின்றன. வாகனம் ஓட்டுகின்றன. வழி காட்டுகின்றன. கால்கள் பலவீனமாகி நடக்காதபோது கைகளே கால்களாகிவிடுகின்றன. கைகளைப் பழக்கி, தன் திறனை வெளிப்படுத்துவதுதான் மனிதனின் மிகப் பெரிய சவால்!

உறக்கத்திலும்கூட நம் கைகள் ஓய்வு எடுப்பது இல்லைதானே? பாதி உறக்கத்தில் அவை தானே போர்வையைச் சரிசெய்துகொள்கின்றன. உடலின் மீது படரும் குளிரை மறைத்துக் கதகதப்பு தருகின்றன. நம்மை மேம்படுத்துவதில் பெரும்பங்கு கைகளுக்குத்தான் இருக்கின்றன. எந்தத் துறையில் நாம் இருந்தாலும் கைகளே நம் சிந்தனைகளை, கற்பனையை, செயல்களை முன் நடத்துகின்றன.

'Small Hands' என்ற டேனிஷ் குறும்படத்தைப் பார்த்தேன். மெலிந்த கை ஒன்று பூவை வரைகிறது. மறு நிமிஷம் எங்கிருந்தோ ஒரு முரட்டுக் கை அதைப் பிடுங்கிக்கொண்டு போகிறது. உடனே, மெலிந்த கை ஒரு மீனை வரைகிறது. முரட்டுக் கையோ, அதைத் தூண்டில் போட்டுப் பிடித்துப் போய்விடுகிறது. எளிய கை இப்போது ஒரு மரத்தை வரைகிறது. பலமான கை கோடாலியாகி அதை வெட்டுகிறது. எளிய கை ஒரு புறாவை வரைகிறது. முரட்டுக் கை அதைக் கொன்று போடுகிறது.

இப்படி எளிய கை எதை வரைந்தாலும் முரட்டுக் கை அதை அழித்துவிடுகிறது. முடிவில் மெலிந்த கை பிரார்த்தனை செய்கிறது. முரட்டுக் கை பிரார்த்தனை செய்யும் கைகளை வெட்டுகின்றன. ஒரு கை அறுபட்டு விழுந்தபோது அதே இடத்தில் இன்னொரு கை முளைக்கிறது. ஓய்வு இல்லாமல் முரட்டுக் கைகள் ஆவேசமாகக் கைகளை வெட்டுகின்றன. பிரார்த்திக்கும் கைகள் முளைத்தபடியே இருக்கின்றன. ஓய்ந்துபோன முரட்டுக் கைகள் முடிவில் செய்வது அறியாமல் தானும் பிரார்த்திக்கின்றன. அற்புதமான படம். நிறைய யோசிக்கவைத்தது. வலது கையும் இடது கையும் ஒரே உடலில் இருந்தாலும் நாம்தான் பேதமாக்கி வைத்திருக்கிறோமோ என்று நினைத்தபடியே இருந்தேன்.

உலகில் சிந்திக்கிற, எழுதுகிற, அறிவால் இயங்குகிற புத்திசாலித்தனமான கைகள் அதற்கான மரியாதையைப் பெற்றுவிடுகின்றன. ஆனால், எளிய மனிதர்களின் கைகள் ஒருபோதும் அதற்கான அங்கீகாரத்தை அடைவதே இல்லை!

10 வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.

அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.

அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.

இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.

அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.

ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.

அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.

கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.

முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.

அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.

'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.

அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.

ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

முடிவு நம்மிடமே இருக்கிறது!

அவளும்....பூமியும்...

மழைத்துளியை...
மறுக்கிறேதே..இந்த பூமி...??

அவளின்.. வியர்வைத்துளியை...
ருசித்த பிறகு!!!!!!

இதழ்....சுவை

இனிப்புகளை....
இகழ்கிறேன்...?
அவள் இதழ் சுவை...
அறிந்த பின்பு!!!!

அவளது இதழ் ஓசை..
உணர்ந்த பின்பு...
இன்னிசைக்கு கூட.. திறக்க மறுக்கிறது,,
எந்தன் செவிகள்.!!!!!

பெற்றோர்கள்

விழுதுகள்.....
மண்ணில் விழுந்த பின்னும்....
நன்றாய் நிலைத்தபின்பும்....

வேர்கள் ஓய்வெடுப்பதில்லை..
உங்களை போல!

காமம்...!!!

இந்த உணர்வில்லேயேல்..
களவு இல்லை..
காதலும் இல்லை...

பொய்கள் இல்லை..
போர்களும் இல்லை...

உறவுகள்..இல்லை..
ஏன்...
இந்த உலகமே..இல்லை!!!!

காமம்...

காமம்..
இது கள்ளி செடியில்..
அல்லி பூக்கள்...
காதலுடன் வந்தால்...

மல்லிகை பூவிலும்..
முட்கள்..
காதல் மறப்பின்!

பதினாறும்...
பறந்து போகும்..
இந்த பசிக்கு..!!!

இரண்டு நிமிடம்...
இந்த உலகத்தின்...
மொத்த சுழற்சியும்!!!


Saturday, 26 June 2010

வெள்ளி புன்னகை

குட்டி குட்டி........
சூரியானாய் விளக்குகளிருந்தும்.....
என் வீதி இருண்டிருக்கிறது.!

நீ...
உன் வீட்டினுள் அடையும் வரை..
என் வீதியிலும்..வெளிச்சமிருந்தது..!

நேற்று...
நீ உள்ளறையில் இருந்த போதும்..
என் வீதியில் வெளிச்சம் இருந்தது..!!!
நீ விட்டு சென்ற..
வெள்ளி புன்னகையை..பிடித்து வைத்திருந்தேன்.

இன்று ஏனோ..
புன்னகைக்க மறந்துபோனாய்..

நானோ..இருட்டின்..கைதியாய்!


கோபம்..காதல்

குற்றால அருவியில்...
குளித்தும் குறையவில்லை..கோபம்!!

அலையாடும்..கடலில்
அலைந்தும்...அடங்கவில்லை...!!

வண்டலூர்..சென்றேன்..
உன்னை விட நான் அழகு என்றது..உர்ரங்குட்டன்...!!!

பூங்கா சென்றேன்...
பூத்திருந்த பூக்கள் பிடிக்கவில்லை..வந்திருந்த பூக்களால்..!!!

தனித்திருக்க..
அறையில்..இருந்தேன்..
அழையாமல் வந்தாய்..

என் தலைகோதி..
தரமறுத்த ஒரு முத்தம்..நூறு தந்தாய்..

வாங்க மறுத்து...உன் மடியில்...
தலை கவிழ்ந்தேன்..
தலை பிள்ளையடி நான் உனக்கு...!!!

பாலை வனம்...அவள்

பூக்களே..பூக்காத பூமி...
பசுமையே..பார்க்காத பாலை..
சுதந்திரமாய்...சூரியன் மட்டுமே..
உலா வரும் பாலை வனம்...
அதன் தட்பவெட்பமே தலைகீழானது....
தங்க மயிலாய்...அவள் வந்த போது..!

Friday, 25 June 2010

சிகப்பு ரோஜாக்கள்

வரும் பொழுது...
வாசலில் வரவேற்று..
சிரிக்கப் பேசி...
செல்லமாய் சினுங்கி..
வசதியாய்.. வளைந்துகொடுத்து..
உன் வசவுகளையும்.. வாங்கி...

இரவு முழுதும் ரோஜாவாய் தானே இருந்தேன்....

விடிந்ததும்...
பணத்தை வீசி விட்டு....

நீ ஏறுடுக்காமல் செல்லும் போது..

வெறும் முட்கள்...மட்டும்தான்...
என் மனதிலும்....உடலிலும்...!

வானம்... நிலா... நீ..அமாவசை

என்னவளே..
இன்று ஒரு நாள்..
நீ உள்ளறையில்...ஓய்வெடு...???

உனை கண்ட பின்
குற்ற உணர்ச்சியில் குறை நிலவாய்..இருந்தவன்...
இன்றுதான் முழுவுருவு கொள்கிறான்...
ஒரு நாளாவது...முழு நிலவாய்...முழுவதும்...
உலாவரட்டுமே...
அதற்காக..
இன்று ஒரு நாள்..என் வானம்..
அமாவாசையாகட்டும்...

இதயம் இல்லாதவள்...

இதயம்தனை..தொலைத்து
விட்டேன்..பெண்னே உன்னிடம்....!
இனி தேவையில்லை... பெண்ணே
என் இதயம்...தருவதென்றால்..
நின்னிதயம் தனை....தா!

இல்லையென்றால்..இதயம் இலாதவனாய் இருந்து விட்டு போகிறேன்...

ஆனால்..இவ்வுலகம் உனைதான் சொல்லும்...


இதயம் இலாதவள்....என்று!!!!!

Tuesday, 22 June 2010

என் காற்று அவள்

உனை நீங்கி..
இங்கு வந்த பின்...
சுவாசிக்க தடுமாறுகிறேன்...
இது வரை அறியவில்லையடி...
உன் சுவாசம் கலவாத...காற்றை...
என் நாசிகள் கூட மறுக்கும்..என!!!!!

Thursday, 17 June 2010

பிடிக்கவில்லை

முத்தமிட்ட கன்னத்தில்...
கை விரல் பதிந்தது...
என்னுள் காதலனும்...கணவனும் கை கலத்த போதெல்லாம்..
உன் கன்னத்தில்..காய்ந்த்தன கண்ணீர் கோடுகள்...

எனக்கே என்னை..பிடிக்கவில்லை..!

Wednesday, 16 June 2010

காதல் ..கனவு

என் கனவிலும் உனைதான்... காதலித்தேன்...
அதனாலா ..என் காதலேயே..
கனவு என்றாய்!....

நீ ...என் தூக்கத்தில் வந்த கனவல்ல..
ஆயினும்..நீ ...
என் தூக்கத்தை...துரத்திய கனவு...!
எனை துக்கத்தில்...ஆழ்த்திய கனவு...!

பிரம்மன்

அந்த பிரம்மனும்..
கவலை கொல்கிறான்...பெண்ணே!!!
சிலரின் விதியை தேவதாஸ் ஆக ..
னீ மாற்றி விடுவதால்!

நான்!

தனிமை....
உணர்த்தும்.. நான்!
இது வரை நான் உயர்த்தி பிடித்த... நான்!
உண்மையில்லை..என ஓடி போன.. நான்!
உணர்த்துகிறது...
நான்... நானல்ல... னீ இல்லாவிடில்!!!!


நான்

நான் தேடுகிறேன்...
என்னில் அல்ல.. உன்னில்..
என்னில் நீ...!
உன்னில்... நான்!
மிகவும் பிடிக்கிறது இந்த ... நான்!

கொலை....

கத்தி இல்லை..
இரத்தம் இல்லை..
சத்தமும் இல்லை...
ஆனாலும் இறந்தே போனேன்...
அவள் எனை ஊடுருவி பார்த்த போது...

ஃபினிக்ஸ் பறவையாய் காத்திருப்பேன்...

மீண்டும் ஒரு முறை இறக்க...!

அவளின் தாவனி

தாவனியை நீ...
சரி செய்த போதுதான்...பெண்ணே...
நான் சரிந்து போனேன்..
சரிந்த தாவனியை சரி செய்தாய்...
என்னை.....???

உயிர் காற்று

ஆக்சிஜன் இல்லாமலே..
உயிர் வாழ்கிறேன்...
அவள் மூச்சு காற்றை சுவாசிப்பதால்!!
உனது ஓர் பார்வையில்...
உயிர் பெற்றதடி...
உயிர் கொல்லும்..
காதல் வைரஸ்...!

Tuesday, 15 June 2010

காதல் சக்தி

ஓர் இரவிற்க்கு ஒருத்தி!! ...
என்று வாழ்பவனையும்...
ஒருத்திக்கு ஒருவனாய் மாற்றும்...
வலிமையனா ஆயுதம் ....காதல்!!1

Sunday, 13 June 2010

தமிழ்

தமிழ் நாட்டீல் உலக தமிழ் மா னாடு கொணடாட்டம்...கலை கட்டவில்லை...
தமிழினீன் உணர்வு என்ன? இதை ஒரு அரசியல் மானாடாக கருதுகிறானா?
அல்ல ஈழத்திற்காக மறுக்கிறானா?...

ஒரு வேலை பாரதி சொன்னது போல்..." இனி தமிழ் மெல்ல சாகுமோ???

காதல்

கண்ணிமைக்கும் முன் காதல் இல்லை!
இமை திறந்தேன்... னீ இருந்தாய்....
காதல் வந்தது...!