Thursday, 20 December 2012

"அன்னை தமிழின் இன்றைய நிலை! "எழுத்தோலை கவிதை திருவிழா"- படைப்பு 1.


"
அன்னை தமிழின் இன்றைய நிலை!
"எழுத்தோலை கவிதை திருவிழா"- படைப்பு 1.
---- ------- ------
தாயே தடுப்பினும்- விடேன் தமிழை பழித்தவனை
தாயே பழித்தால்.. என் செய்ய

அம்மா என்றழைப்பை- விரும்பாத அம்மாக்கள்
ஆடு மாடுகளுக்கும் - ஆங்கிலம் கற்று தரும் கயமை கூட்டம்

டமில்..டமில் என்று எம் தமிழுக்கு டுமீல்
தொட்டிலிலும் சரி..
கட்டிலிலும் சரி.. தொடா தூரத்தில் தமிழ்

சாதிகள் ஒழிய..கலப்பு மணம்
தமிழ் அழியவா.. மொழிகளவுமணம்

இருபதாயிரம் வருடம் கடந்துவிட்ட களைப்போ.??
முதலில் தோன்றியதால்.. வந்திந்த முதுமையோ??

தமிழ் வாழ்க என்று சொல்லி சொல்லி
ஆங்கில பள்ளிகள் நடத்தும் கோமகன்கள்

தமிழில் பேசதடையிடும்..
தமிழாசிரியர்-தந்தையாக??!!!

ஆயிரம் கைகள் மறைப்பினும்..ஆதவன் மறைவதில்லை
ஆங்கிலம் கலப்பதால் எம்தமிழ் மரிப்பதில்லை!!

இளமை வேகத்திற்கு கொஞ்சம் தடுமாறும் தமிழ்
இளமை உணர்விற்கு கொஞ்சமும் தளரா திமிழல்லவா

கன்னியவளின் கடைகண்களின் கன்னியில் சிக்கிய
காளையர்களின் கைகொடுக்கும் தெய்வம் கன்னிதமிழே!

இவ்வுலகம் மரணிக்கும் வரை..காதல் வாழும்
காதல் வாழும்வரை.. கன்னிதமிழம் வாழும்

இன்றைய தமிழக தேவை...
மின் மட்டுமல்ல...
இன்தமிழும் கூடத்தான்..

கூடி உரைப்போம்..சூடி மகிழ்வோம்
தமிழை..தாய் தமிழை

மன்னை செந்தில் .
"

"தமிழ் வழி கல்வி (எழுத்தோலை கவிதை திருவிழா)-படைப்பு-2


"
தமிழ் வழி கல்வி
(எழுத்தோலை கவிதை திருவிழா)-படைப்பு-2
------ ------- ------ ---- ------ ------ -----
தத்தி தடுமாறி நடக்கும் மழலைகளும்....
மம்மி டாடி என்றே அழைக்கும்
அதனாலோ தடுமாறும் தாய்மொழி கல்வி?

தமிழ்வழி கல்வியில்தான் படித்தேன்
தமிழில் கவிதை பல வடித்தேன்...
ஆனாலும் என் பிள்ளை...??
சுய நல தமிழர்களால் சறுக்கும் தமிழ்வழி கல்வி

மற்ற மொழிகள் ஆடையணியா காட்டுமிராண்டியாய்..
எம் தமிழோ ஐந்து பன்னிசைக்கும் இலக்கியாருவியாய்
மற்றவை..கால்நடையாய் நடக்கும் போதில்..
திருக்குறள் தேரில் சென்றது எம் தமிழ்

அறிவியலை அணைப்பதில்..
பொறியியலை புரியவைப்பதில்..
அணுவியல்..ஆற்றலியல்..மின்னறிவியலில்...
தொடர்புசாதன கல்வியில்..தொடர்பில்லாமலே
சிறிது தடுமாறுகிறது.. எம் தாய் மொழிக்கல்வி!

தமிழ் ஆங்கில களவியலால் வந்ததிந்த..வழுக்கல்

ஒரு வரி ஆங்கிலம் அறியததாலேதான்..
அமெரிக்காவிற்கு போட்டியாய்..சீனா

அமெரிக்கா போவதுதான்..உச்சமாய்
அதுதான் லட்சியமாய் .. நம் கல்வியின் நிலை
அதனால் அடங்கிபோகிறது தாய்மொழி தமிழ் கல்வி!

புரிகிறதோ இல்லையோ..
பொதுமொழியாயிற்று ஆங்கிலம்..
அதில் புகுந்து வாழ்வதே..பிழைப்பாயிற்று

இலவச கல்வியில் மட்டும் தமிழென்பதால்..

தமிழ் வழி கல்வி என்பது..
வருமையின் வெளிபாடாம்..
ஆங்கில கல்வி என்பது..
அடிப்படையாயிற்றாம்!

ஆங்கில கல்வி அவசியமாயிற்று
மற்ற மொழி கற்றல் அட்வாண்டேஜ் ஆயிற்று
தமிழ் வழி கற்கும் குழந்தையெல்லம்..தொழிலாளியாயிற்றே!

ஆங்கிலப்பள்ளியில் படிக்கும்..
அருமை மகன் படிக்கிறான்..
பாரதியின் வரிகளை...
"இனி தமிழ் மெல்ல சாகும்"

மன்னை செந்தில்..

"குழந்தை தொழிலாளர் முறை (எழுத்தோலை கவிதை திருவிழா)- படைப்பு-3


"
குழந்தை தொழிலாளர் முறை
(எழுத்தோலை கவிதை திருவிழா)- படைப்பு-3
------ ----- ------ ----- ----
இனியும் பல்லாண்டு வேண்டும்..
இந்தியா வல்லரசாய் மாற???
ஒரு குழந்தையும் தொழில் சுமக்கா நாள்தான்
அத்திரு நாள்..என்று வருமோ?

படித்தால்..புத்தக மூட்டை..
படிக்காவிட்டால்..ஏதோ ஒரு மூட்டை
புத்தகசுமையை விட அச்சுமை எளிதாயிற்றோ?

ஒரு குழந்தை வரம் வேண்டி.... - கோடி பேர் தவிக்க
பல குழந்தை சாபம் பெற்ற --- பல பேர் பரிதவிக்க
வறுமைக்கும்.. வளமைக்குமான போட்டி
“இடையில்..பெரும் பள்ளம்”
நிரப்ப வேண்டி சுமக்கும் சுமையா??

அரைசாண் வயிற்று பள்ளம் நிரப்ப..
ஓடிகொண்டேயிருக்கிறது ஒரு கூட்டம்..
அதன் முற்றத்தில் விளைந்த....
குருத்தெல்லாம்—பயிறாகும் முன்னே கருகுவதோ??

இலவச உணவிட்டும்..
சீருடை முதல் செருப்பு வரை தந்தும்
சிறகை ஒடித்துகொண்டு... சுமை சுமக்கும் சிறார் கூட்டம்
காசின் மீது காதலா? கல்வியின் மீது வெறுப்பா?

அறிவு பசியை அடக்கிவிடும் வயிற்று பசி..
சிறகுகளை ஒடித்து போடும்.. கட்டுபாட்டு கல்விமுறை!

“பிச்சை புகினும் கற்கை நன்றே”
“வறுமையிலும் செம்மை”
“ஏழைக்கோர் எழுத்தறிவித்தல்”.. அறியவேயில்லை..
ஆங்கில வழி நிற்கும் சமூதாயம்

அடிவயிற்று தீக்கு நீர் வார்ப்போம்
மதிப்பெண்ணால்..அளவிடும் கல்விமுறைக்கு
கல்லறை சமைப்போம்
ஏழை பணக்காரன் பிரித்துவிடா..
சமசீர் கல்வி கொடுப்பொம்
எளிதில் புரிந்து கொள்ளும் தாய்மொழிகல்வி தருவோம்

இளம் சிறார்களின் சிறகை வளர்ப்போம்..
அவமான குழந்தைதொழிலாளர் முறை ஒழிப்போம்..!!

மன்னை செந்தில்
"