Thursday, 16 June 2011

எல்லாம்..நீயாய்!!!

ஆர்பாட்டமில்லா அரபு கடற்கரை..

கால் வைத்தவுடன்..கரம் கோர்த்து நடந்த ஞாபகம்!

விழித்தெழும் நேரம் உன் முகம் தேடும்.. மனம்

வெற்று அறை..

நீ சொல்லாமல் .. நான் புகும் குளியலறை

நானே எடுத்து செல்லும் துண்டும்..

இரு முறை இட்டும் மணக்காத சோப்பும்..

வழமை போல் அரையீர தலை..வைய நீ இல்லை!


ஒரு கை எண்ணை..

எனக்கும் நம் மகனுக்கும்

நீ என்ன சின்னபுள்ளையா..அவன் கேலி செய்ய

ஆமாங்கிறேன் என சொல்லி சொல்லி ஊட்டும் விரல்கள்

அவப்போது வரும் ஊடலும்.. பெரும் ஊடலும்

7 வருடம் முடிந்தது என்பதை நம்ப மறுக்கும்- இவனில்லையேல்


பணிமுடியும் நேரம் தெரிந்திருந்தும்..

சிலமுறை தொல்லைபேசி.. வரும் நேரம் கேட்பாய்..

வண்ண விளொக்கொளியும்..நிரப்பாத வீட்டில் நான்

விரல் மீறி வந்த நகம் சொல்லுது.. நீ இல்லை என

எனை மீறி சொடுக்கு எடுக்கையில்.. சத்தம் சொல்லும்

இந்த வேலையும் உனதானதடா என..

இரு தினம் ஒரே ஆடை..தடுப்பதற்கு இல்லை நீ..

தடுமாறிதான் போகிறேன்..இத்துனை சோம்பேறீயா நான்


தனிமை நொறுக்க...வெளி போகிறேன்

தவித்து போகிறேன்..அங்குமிங்கும் நீ .. நினைவுகள்

புல் வெளியில் கால் தொட..

மடி மீது தலைவைத்து..நீண்டு கண்ணயருகையில்..

காது கூச வைக்கும் புல்..நினைவுகள் தொடுகிறது

இன்னிசையை காது முழுதும் நிரப்புகிறேன்..

தனியாய் கேட்கிறது..எப்பொழுதோ நீ "ஹம்மியது"

விரட்டி விரட்டி சுடுகிறது நீ எனும் தீ..

கடுகளவுமில்லை காமத்தீ..


கவிதைகளுக்காய் தந்திட்ட காதலா நீ..

காதலால் கசிந்திட்ட கவிதையா நீ..

உனை சொல்ல கவிதையுண்டு..

முழுவதும் உரைத்திட்ட காதலில்லை..

இதுவும் முற்று பெறா கவிதையே!

Wednesday, 15 June 2011

FB STATUS..கிறுக்கல்கள்

நீ இலாத நாட்களிலும்..வீட்டில் துயின்றுள்ளேன்..
அன்றெல்லாம்..அறைகள் சேமித்த உன் கொலுசொலி
எனை கொஞ்சி..கொஞ்சி தூங்க வைத்தன..
இங்கும் நீ ..சில நாள் தங்கிபோகத்தான் வேண்டும்...
அதுவரை உறங்கா விழிகளோடுதான் நான்!!

தெரிந்துதான்..பிரிந்தேன்..
மன வலிமை..உண்டென நினைத்தேன்..
மன வலி..மட்டும்தான் மீதமிருக்கிறது!!!

வான் மழை ஓய்ந்தபின்னும்..
நீர் நிற்க வில்லை.. கண்ணீர் நிற்கவில்லை
கண் விரிய பார்த்த விமானம்..இன்று
கடக்கையில்-காதுகளை மூடுகிறாள்..
அவள் என்னுடன் வர மறுக்கும் முதல் பயணம்..
விடை தரும் பயணம்.. ! காலம் கனியும் ...
கனியவள் புன்னகை கண் முன் வரும்..!

காவி கட்டிய கழைகூத்தாடி..
அப்படிதான் தோன்றியது..ராம்தேவின் கானொளி கண்ட போது!!

வரவா..வேண்டமா...
கேட்டுக்கொண்டே இருக்கிறது மழை!
வரவா.. வேண்டாமா..
என கேட்காமலே..மனதுள் மழைபெய்கிறது உன் நினைவுகள்!!

Sunday, 5 June 2011

சொர்க்கம் விலக்குகிறேன்...

சொர்க்கம் நீக்கி.. நரகம் ஏகுகிறேன்

கூண்டில் அடைபட... பறக்க போகிறேன்..

சோலை மறுத்து..பாலை பாய்கிறேன்..

உதிரம் முறித்து உயிர் தந்தவளை..

உயிருக்கும்.. உடலுக்கும் உரமானவனை..

ஓளிவின்றீ..ஒன்றாய் கலந்து உயிரானவள் தவிக்க..

ஆன்மையின் அடையாளமாய்..வாழ்வின் அர்த்தமாய் வந்தவனை விடுத்து..

உறவுகளை உதறி.. உலவ போகிறேன்..

தூண்டில் புழுவுக்கும் சிக்கும் மீனாய்..

சிற்றின்ப கனவுகள் தின்றூ.. சிக்கப்போகிறேன்

கண்களை விற்று.. சித்திரம்

என் கணங்களை.. விற்று கனவுகள்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து..அடக்க

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.. கட்டவிழ்க்க

ஆசை தோனியில் அஞ்ஞனவாசம் போகிறேன்..

அனைத்தும் அவன் அருளிருக்க ..ஆசையாடும் மனத்தால் அரற்றுகிறேன்

நல் கல்வி..எது குழப்ப .. நல்ல பள்ளிக்கு நாற்பதாயிரமாம்..

தமிழ் வழி படித்து வந்திட்டேன்.. ஆனாலும் தவிக்குது மனசு..

சமச்சீர் கல்வி சரியில்லையாமே..???

உழைப்பால் உயரலாம்.. உணர்ந்தாலும்..

எம்மக்களுக்கு இலவசமாய் பெரும் படிப்பு குடுக்க..குடி பெயர்கிறேன்..

சில காலத்தில் சேர்த்து வைத்து..என் மண்ணில் வாழ்வேனோ..

தாய் மண்ணாய்தான் போவேனோ..

ஒரே கல்வி..உயர்கல்வி வரை இலவசமெனில்..

உழைப்பாளிகள்.. பஞ்சம் வெளி நாடுகளில்

ஒரு வேளை நம் கல்விமுறை வெளினாட்டு சதியோ??

யாரவது சரியாய் சொல்லுங்கள்..10 வருடம் கழித்து BE க்கு எத்துனை லட்சம்???

அதனை சேர்த்து விட்டு.. என் நாட்டுக்கு வந்துவிடுவேன்!!