Sunday, 5 June 2011

சொர்க்கம் விலக்குகிறேன்...

சொர்க்கம் நீக்கி.. நரகம் ஏகுகிறேன்

கூண்டில் அடைபட... பறக்க போகிறேன்..

சோலை மறுத்து..பாலை பாய்கிறேன்..

உதிரம் முறித்து உயிர் தந்தவளை..

உயிருக்கும்.. உடலுக்கும் உரமானவனை..

ஓளிவின்றீ..ஒன்றாய் கலந்து உயிரானவள் தவிக்க..

ஆன்மையின் அடையாளமாய்..வாழ்வின் அர்த்தமாய் வந்தவனை விடுத்து..

உறவுகளை உதறி.. உலவ போகிறேன்..

தூண்டில் புழுவுக்கும் சிக்கும் மீனாய்..

சிற்றின்ப கனவுகள் தின்றூ.. சிக்கப்போகிறேன்

கண்களை விற்று.. சித்திரம்

என் கணங்களை.. விற்று கனவுகள்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து..அடக்க

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.. கட்டவிழ்க்க

ஆசை தோனியில் அஞ்ஞனவாசம் போகிறேன்..

அனைத்தும் அவன் அருளிருக்க ..ஆசையாடும் மனத்தால் அரற்றுகிறேன்

நல் கல்வி..எது குழப்ப .. நல்ல பள்ளிக்கு நாற்பதாயிரமாம்..

தமிழ் வழி படித்து வந்திட்டேன்.. ஆனாலும் தவிக்குது மனசு..

சமச்சீர் கல்வி சரியில்லையாமே..???

உழைப்பால் உயரலாம்.. உணர்ந்தாலும்..

எம்மக்களுக்கு இலவசமாய் பெரும் படிப்பு குடுக்க..குடி பெயர்கிறேன்..

சில காலத்தில் சேர்த்து வைத்து..என் மண்ணில் வாழ்வேனோ..

தாய் மண்ணாய்தான் போவேனோ..

ஒரே கல்வி..உயர்கல்வி வரை இலவசமெனில்..

உழைப்பாளிகள்.. பஞ்சம் வெளி நாடுகளில்

ஒரு வேளை நம் கல்விமுறை வெளினாட்டு சதியோ??

யாரவது சரியாய் சொல்லுங்கள்..10 வருடம் கழித்து BE க்கு எத்துனை லட்சம்???

அதனை சேர்த்து விட்டு.. என் நாட்டுக்கு வந்துவிடுவேன்!!


1 comment:

  1. ////ஒரு வேளை நம் கல்விமுறை வெளினாட்டு சதியோ??

    யாரவது சரியாய் சொல்லுங்கள்..10 வருடம் கழித்து BE க்கு எத்துனை லட்சம்???

    அதனை சேர்த்து விட்டு.. என் நாட்டுக்கு வந்துவிடுவேன்!//// ஆம் நண்பரே ஒரு வகையில்.. இனியேனும் ஒரு விதி செய்வோம் ஒன்று கூடி

    ReplyDelete