Saturday, 30 July 2011

சொர்கம்...

சொர்கம் தேடி..தேடி கடவுளை சேர்ந்தேன்..

மண்ணில் கொஞ்சம்... தந்தால் என்ன என்றேன்..?

சிரித்தார்.. வா என்னுடன் என்று புவியில் சிலரை சுட்டினார்..

பால் மணம் மாறா குழந்தை சிரிக்க - தாய் தந்தை இப்போது சொர்கம்

தாய் மடியில் துயிலும் ..சேய்க்கு சொர்கம்..

கொளுத்தும் வெயில்.. காதலி மடியில் -சொர்கமடா..

பெரும் தோல்வி.. ஆறுதலாய் மனைவிமடி -சொர்கம்

60 ஐ தாண்டி.. அரவனைப்பாய் பிள்ளை..- மடி விளையாடும் பேரப்பிள்ளைகள்-- இறக்கும் முன் சொர்கம்..

எதிர்பார்பன்றீ கூடவே வரும் நட்பும் சொர்கம்..

இவையெல்லாம் படைத்திட்ட நானே ஏங்கும் சொர்கம்..என்றான்!

மனித பிறவி வேண்டா வரம் கேட்காமல்..மீண்டும் பிறப்பெடுக்க ஆசியுற்றேன்

இந்த நொடி..இனிய நொடி

மண்ணில் சொர்கம் அமைப்போம் !


No comments:

Post a Comment