Saturday, 30 July 2011

புரிதல்..

புரிதல் முதல் பார்வையில்..பிடித்ததில் தொடங்கியது..
புரிதல் புதிரில்லாமல் புதியதாய் ..புரிந்து..
புரிந்து புரிந்து..மணம் புரிந்து..
புரிந்து.. முதல் புணர்ந்து.. தளவுற்ற பின்..
புரிதலின் முதல் இடைவெளி..புரியதொடங்குகிறது புதியதாய் புரிதல்!


பேசி பேசியே..கழிந்த தினங்கள்..
பேசாமலே கழலும் தினங்கள்..
அள்ளி அள்ளி கண்ணில் நிரப்பிய காலம்..
கையிலுள்ள.. நிழற்படம் கூட நோக்கா காலம்..
இனுமும் அந்த காதல் என்னுள் உயிர்த்துள்ளதா??????

நீ எனை புறக்கணித்த நொடிகள்..
மலரும் நினைவாய்..
உன் காலடியில் கசங்கிய மனது..
வாட வைத்த உன் வார்த்தைகள்...
ஆனாலும் பூத்தது போலேதான் உள்ளது..காதல்!!

நான் முழுதும் ..அறிந்து தெளிந்த விடயம் நீ..
முற்றிலும் புரியாத புதிரும் நீயாய்..
வகுப்பை தாண்டியதும் மறக்கும் பாடமாய்..
அவளின் மீதான புரிதல்..!

No comments:

Post a Comment