Monday, 19 September 2011

FB STATUS..கிறுக்கல்கள்....

கவிதை எழுத ஆசையுண்டு..
கை வராத நண்பர்கள் எல்லாம்..
ஒற்றை சொல் கவிதை எழுதலாம்..
உங்களவள் பெயர் எழுதி..
காலை வணக்கம்...கைகூடட்டும் இன்றைய ஆசைகள்.. எல்லாம்!

நீ சிக்கனமாய் சிரித்த போதும்..
செலவாளி நான் முழு மனதையும் கொடுத்து!!!

சொன்ன வார்த்தைகளை..
சொல்ல நினைத்து..சொல்லாத வார்த்தைகளை
அசைபோட்டு.. ஆசையாய் எழுத்தில் வடித்து
அருமையான கவிதையாய் ஆசையாய்
உன்னிடத்தில் தரும் போது..
எழுத்து பிழை திருத்தி திரும்ப தருகிறாய்..
என் காதல் பிழையாகுமோ..பிழைக்குமோ???

மாறாத விதி.. மறதி..
அதில் விதி மாறலாய்.. முழு மதி அவள் முகம்!
மூன்று அமாவாசை கடந்த பின்னும்...
பௌர்ணமியாய்.. என் மனதில் அவள்..
2ம் சந்திப்பில் புருவம் நெறித்து நீ பார்க்கையில்..
விதி செய்த சதி புரிந்தது!!!

No comments:

Post a Comment