எழுதப்பட்ட கவிதைகளை வாசித்து கொண்டிருக்கிறேன்..
பணியும் பணமும் பாதித்த கவிஞனை மீட்டெடுக்க..
உருகி எழுதிய காதல் வரியெல்லாம்..
ஒரு புன்னகையை உதட்டில் ஒட்டியது அவளவே..
வரிகளும் .. வாழ்க்கையும் கேலி செய்வதால்..
அவலம் சாடும்.. சமூக வரிகள் கூட சிரிக்கிறது
பணம் தேடி மண் துறந்ததால்..
எண்ணமும் எழுத்தும் .. ஒட்டாத வாழ்க்கை
என்ன செய்ய.. என்ன செய்ய
மணிமகுடம் தரித்து...
பல வருடம் போரிலே கழித்து இறந்துவிட்ட மாமன்னவன் போலே
காணி நிலத்தில் அழகிய வீடுமுண்டு...
காற்று தர நல் மரமுண்டு
காதல் செய்ய துணையுமுண்டு..
கண் நிறைய மக்களுமுண்டு..
மன்னவனோ அன்னிய மண்ணில்!!
என்ன வாழ்கைடா இது????
No comments:
Post a Comment