Sunday, 11 December 2011

ரஜினி- - ஒரு நிஜ சகாப்தம்


ரஜினி..

மூன்றெழுத்தில்.. கட்டுண்டு ஒரு உலகம்.!

ஒரு நடிகனுக்கு அடிமையா நீ??

ஏளன கேள்விகளை கடந்துள்ளோம்..

உள்ளில் ஒரு தீ உண்டு எங்களிடம்..

அதன் திரி ஏற்றியவன் அவனல்லவா..

வெறும் தலைமுடி கோதியதோ..

சிகரெட் மாற்றி போட்டதா கட்டி போட்டுள்ளது..

உண்மையாய் உழைப்பவன் உயரத்தில்..

உள்ளத்தில் வைத்து உயருகிறோம்!

ரஜினியை படத்தில் உணரவில்லை..

எங்களை உணர்கிறோம்..

விருந்தில்லை..

அழைப்பில்லை..

அரசியலில்லை..

வருடா வருடம் படமும் இல்லை..

ஆனால் கலையாத கூட்டமுண்டு..

கட்டு பட்ட கடலலை போல்..

அரசியல் வருகை

அதை பற்றி எதிரியாய் நின்று வைக்கும் விமர்சனமும்

அடிக்கோடிட்டு காட்டும்.. அவரின் மீதான எதிர்பார்ப்பை!!

நிச்சயமாய் நாற்காலி தெரிந்த போது..

நிதானமாய் அதை மறுத்தவன்..

சேர்த்து வைத்த செல்வாக்கை சொல்வாக்கில் செலவழித்தவன்..

காலத்தின் போக்கில் ..

நீரோட்டம் போல..

காட்சிகள் மாறிய போதும்..

கலையாத மலையாய்..

அவரோடு தொலைபேசியதை..

அரசு குறிப்பாய்..அரசியல் குறிப்பாய்

உழைப்பும்..

அடக்கமும்..

உற்சாகமும்..

வேகமும்..

எளிமையும்..

எங்களின் மன்னவன் நீ

நாளை யாரறிவார்..

உன்னை நீ அறிவாய்..!

உனை போல் உழைத்திட உறுதி பூண்ட கூட்டதிலொருவன்!!!


No comments:

Post a Comment