Sunday, 8 January 2012

உறக்கம் கொல்லும் உன்மத்த காதல்...

உறக்கத்தை பிடித்து நிறுத்திவைக்கிறது..

உன்மத்த நிலை அடைந்த காதல் நினைவுகள்..


இமை திறந்தும்..

இமை மூடியும்..

மறையா உருவங்களாய்.. நாம் உலவிய தினங்கள்


சிறு தூறல்..

சில்லென்ற காற்று காலத்தில்

சிக்கனமாய் சிரித்து அறிமுகமானது


நல்லதொரு நட்பு வட்டம்

நாட்கள் சிலவற்றில் நீயும்


பெண்ணென்று பிரித்திரா தோழமையில்..

பெண்தான் என பிரிந்து நின்றவள்


கண்ணியத்தில் கட்டுகுலையாதவனை

கண்ணசைவில் கன்னியவனாய்..


திகட்டாத நட்பு விருந்தில்

திகிலூட்டும் காதல் ரசம் தந்திட்டாய்


அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும்

ஆசை பார்வைகளும்

இதழ் சுழிப்புகளும்

ஈரக்காதல் விழிகளும்

உறக்கம் கொன்ற உள்ளுணர்வுகள்..

உந்தி தள்ள ...


காற்றும் மழையும் காதல் கொள்ளும் நாளில்

கனியவள் கரம்பிடித்து உறைத்ததென் ஆசையை


எனை பொசுக்கிய அதே புன்னகையை

ஏமாற்றம் தருவதற்கும் முன்னோட்டமாய்


வெடியென சிரித்தாய்..

இடிச்சத்ததில் நல்ல வேளை கரைந்து போயிற்று..


கன்னிகள் வீழ்த்தாத எனை

கண்னிமை கன்னி வைத்து வீழ்த்தும் வேகத்திலிருந்தாய்...வென்றாய்


சடுகுடு போல சதிராடினாய்

சத்தமின்றி சிதறினேன்..


கண்ணிமை தாண்டி கரைஉடைத்து கண்ணீர்..

கார்மழை கன்னத்தில் வழிய ஆண்மை காக்கப்பட்டது..


சின்னாபின்ன நெஞ்சம் மறைத்து

சின்னதாய் முறுவலித்து கரம் குலுக்கி

உன் புன்னகை முகம் நெஞ்சில் நிறைத்து

விலகும் நேரமும் கன்னம் முழுதும் மழை கண்ணீர் மறைத்து


தொலைதூரத்திலே கடந்து

அரிதாய் புன்னகைத்து

காலம் கடந்து.. நட்பின் வற்புறுத்தலால்

நல் நண்பனாய் வந்தமர்ந்து..

வள்ளுவன் வாசுகியாய் வாழ வாழ்த்து சொல்லி

விலகி வருகையில் என் கண்ணோர முத்தின் அர்த்தம் தெரியும்..


உன் கண்னோரத்திலும் முத்து..

வியர்வையா?

கல்யாண வேள்வி புகையோ?

இல்லை...?????

எண்ணி எண்ணி உறக்கம் கொல்லுகிறது..

உன்மத்த நிலையடைந்த காதல்!!!!


No comments:

Post a Comment