உனை சந்தித்த நாளில்..
உள்ளங்கையில் முளைத்ததடி
ஒரு புது ரேகை..
விரலில் தொடங்கி
இதயம் நுழைந்ததந்த
காதல் ரேகை
அந்த ரேகைக்கு
அடிமைபட்டு போனதடி..
என் ஆயுள் ரேகையும்!
ஆளில்லா தேசத்திலும்..
அம்மா மடியடி
உன் காதல்!!
பாலைவன மணலிலும்
நிழல் தரும் தருவடி
உன் காதல்!!
மயிலிறகும்..
மாசுபட்டு நிற்குதடி..
உன் விரல் வருடல் முன்!!
புது மலர்கள் அத்துனையும்..
மணக்காமலே போகுதடி..
உன் கூந்தல் வாசத்தில்!!
இளையராஜா கூட..
தோற்றுபோனதென்ன..
எனக்கேஆன உன் தாலாட்டில்!!
உனை நினைக்கும் போதெல்லாம்
மணக்கிறாய்...
இனிக்கிறாய்..
யாரடி நீ!!??
நீ...
எனக்காய் விழிக்கும் சூரியனாய்...
எனை துயில வைக்கும் நிலவாய்..
எனக்காய் மட்டும் வீசும் தென்றலாய்...
என் தோட்டத்தில் பெய்த மழையாய்..
எல்லாமும் எனக்காய்!!!
உன் கரங்களில்...
உள்ள பொழுது..
மரணம் கொன்ற மன்மதனாய்..
உன் மடியில்..
உள்ள போதோ..
தாயின் கருவறை சிசுவாய்!!
என்...
நேசித்தலும்..
யாசித்தலும்...
சுவாசித்தலும்..
நீயாய்!!
உனக்கான..உலகத்தில்...
நானும்....
எனக்கான...
உலகமே.... நீயாய்!!!
உள்ளங்கையில் முளைத்ததடி
ஒரு புது ரேகை..
விரலில் தொடங்கி
இதயம் நுழைந்ததந்த
காதல் ரேகை
அந்த ரேகைக்கு
அடிமைபட்டு போனதடி..
என் ஆயுள் ரேகையும்!
ஆளில்லா தேசத்திலும்..
அம்மா மடியடி
உன் காதல்!!
பாலைவன மணலிலும்
நிழல் தரும் தருவடி
உன் காதல்!!
மயிலிறகும்..
மாசுபட்டு நிற்குதடி..
உன் விரல் வருடல் முன்!!
புது மலர்கள் அத்துனையும்..
மணக்காமலே போகுதடி..
உன் கூந்தல் வாசத்தில்!!
இளையராஜா கூட..
தோற்றுபோனதென்ன..
எனக்கேஆன உன் தாலாட்டில்!!
உனை நினைக்கும் போதெல்லாம்
மணக்கிறாய்...
இனிக்கிறாய்..
யாரடி நீ!!??
நீ...
எனக்காய் விழிக்கும் சூரியனாய்...
எனை துயில வைக்கும் நிலவாய்..
எனக்காய் மட்டும் வீசும் தென்றலாய்...
என் தோட்டத்தில் பெய்த மழையாய்..
எல்லாமும் எனக்காய்!!!
உன் கரங்களில்...
உள்ள பொழுது..
மரணம் கொன்ற மன்மதனாய்..
உன் மடியில்..
உள்ள போதோ..
தாயின் கருவறை சிசுவாய்!!
என்...
நேசித்தலும்..
யாசித்தலும்...
சுவாசித்தலும்..
நீயாய்!!
உனக்கான..உலகத்தில்...
நானும்....
எனக்கான...
உலகமே.... நீயாய்!!!
No comments:
Post a Comment