Tuesday, 8 March 2011

சொல்லா வார்த்தைகளின் சுகம்..

சொல்ல துடிக்கும் வார்த்தைகள்...

ஒவ்வொரு இரவும்..சிந்தித்து..

வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சிலையாய் வடித்து..

உனை காண்கையிலே..உருகும் பனிக்கட்டியாய்...

ஐஸ்கிரீம் சிலையால்..கரையும் வார்த்தைகல்(ள்)..

நட்பாய் சிரிக்கிறாய்..

நன்றாகத்தான் பேசுகிறேன்..வேறு விடயங்களை

காதல் மட்டும்..வரவேயில்லை வார்த்தைகளில்

ஒரு தினத்தில் உதித்த காதல்..

உனையடைய ஒரு வருடமாய் காத்திருக்கிறது..

நட்பெனும் ரயில் பிடித்து உன் அருகில் வந்தேன்..

காதல் சொல்ல முயலும் போதோ..உன் கையில் அதே நட்பெனும் சிகப்பு கொடி!!

சரி நட்பே போதுமென ..நகர்ந்து விடுவேன்

துயிலவே விடுவதில்லை..துன்புறுத்தும் காதல்

நேர் வார்த்தைகள்..உனை நெருங்கா

என கொண்டு..மறைமுக வார்த்தைகளால் மனமுறைக்கும் முயற்சி..

அதில் இது வரை இல்லை அயர்ச்சி..

நடை பெறுமா காதல் இடப்பெயர்ச்சி

ஒவ்வொரு தினமும்..உரையாடிவந்து அசை போடும் மனது..

சில வார்த்தைகள் உரைத்துவிட்டதாகவே நம்பும் ஆசை மனது..

ஒவ்வொரு இரவும்..தித்திக்கும் கற்பனையில் என் மனம் உரைத்த வார்த்தைகளால்

தேர்ந்தெடுத்து கொண்டேயிருக்கிறேன்...வார்த்தைகளை தினமும்

வருடம் தோறும் மழையை நம்பும் விவசாயியை போல

சொல்லா வார்த்தைகளும் சுகம்தான்!!!


No comments:

Post a Comment