யாரடி நீ..
என்னுள் யாரடி நீ??
எப்படி ஆனேன்.. நான் நீயாய்??
யார் நீ அல்ல எது நீ??
என் கண்மணியா நீ..
சில நேரம் நீயற்ற பொருளையும் காட்சிபடுத்தலால்..அதுவல்ல நீ!
அனைத்தையும் இயக்கும் மூளையோ..
கண்ணில் தெரியும் பிம்பம் எல்லாம்.. நீ அல்ல என அறிவுறுவதால் அதுவமல்ல!
உள் செல்லும் உயிர் காற்றா..
பலமுறை நுரையீரலின் அடிப்பாகம் கூட தொடாமல் திரும்புமாம் சுவாசம்..
எங்கோ படித்தது ஆகையால் அதுவுமல்ல நீ!
இதயமே நீ எனவா..
எண்ணங்கள் உதிப்பதில் இதனில் இல்லை என்கிறது அறிவியல்
எங்கும் பாயும்..இரத்தமோ நீ
வயதானால் ஓட்டம் குறையுமாமே..??
என்னுள் நீ குறைய இயலாதே..!!
சரி என்னுயிர்தான் நீ ..
முடிகளும், நகங்களும்..உயிரில்லை எங்களுக்கு என சிரிக்கிறது போ
யார் நீ..யார் நீ..
நான் அறிதல் முக்தியாம்..
"நீ அறிதல்" முடிந்தால் அல்லவா.. நான் அறியலாம்!!
No comments:
Post a Comment