உலமெல்லாம்..ஜப்பான் வளர்ச்சியை
நோக்குவதால்..கடலே நீயும் பார்த்தாயோ..
இதயப்பகுதியில்..அணுகுண்டு தாங்கி
எழுந்து நிற்கும்..5 அடி மனிதர்களை காண
50 அடி எழுந்து ஆர்பரித்து வந்தாயா..
இயற்கையை விஞ்சும்...
அறிவியல்..அவர்களது...அதனால்
ஆத்திரப்பட்டு வந்தாயோ..
கார்கள்..எல்லாம் கட்டுமரம் ஆனது..
கண்டெய்னர் கூட காகிதகப்பல் போல..
அதிர்வுகளை அட்ஜஸ்ட் செய்யும்..கட்டிடங்கள்
அதனாலா..அடியோடு பெயர்த்தெடுத்தாயா..
அமெரிக்காவை விட நீ தான் வலிமையானவன்..
போட்டிக்கு அணு உலைகளை..வெடிக்க செய்கிறாய்
இயற்கையின் ருத்ரதாண்டவம்..
இசையாய் அறிந்தோம் ..
இனிமாயாய் நினைத்தோம்....ஒய்வெடுப்பது கூட உன் மடியில்தான்..
இன்றுதான் மீண்டும் உரைத்தாய்-நான்
இன்னல் என்று..-மண்டியிட்டோம்.
நேற்று கோடிகளில் புரண்டவன்
இன்று தெரு கோடியில் கூட அல்ல..ஊர் கோடியில்..
உழைத்தே உயர்ந்தவர்கள்...அலையடித்து கவிழ்த்துவிட்டாய்
மீண்டும் உழைப்பார்கள் என்ற நம்பிக்கையா
இறைவனே..இல்லை என்றே
நேற்று ஈழமும்..
இன்று ஜப்பானும் சொல்கிறது..
அலையாடும் கடல்..இனி
அழித்தாடும் கடலாய்..
No comments:
Post a Comment