Monday, 30 May 2011

சின்ன சின்ன கிறுக்கல்கள்...

மின் அமர்ந்த..இருளில்
நிலாகாற்று ஒளியில்..மொட்டை மாடியில்..
நிலா சோறு.... அவளொடு
மின் வாரியம் ..வாழ்க!

இது என்ன ரச வாதமோ..
கண்ணாடி ரசம் கூட உன் முகம் மட்டும் காட்டுகிறது..
சவரம் கை கூட வில்லை இக் கண்ணாடியால்..
காதல் தோல்வியா..எனும் பரிகசம் ..
எப்படி சொல்வேன்..இது உன் நினைவின் வெற்றி என!!


ஒரு அறிகுறி கூட இல்லை..
ஒரு சலனமும் இல்லை..அது சாத்தியமா கூட புரியவில்லை...
ஒரு ஒரப்பார்வை..சின்ன இதழ் பிரிந்து தெற்றுபல்புன்னகை..
ஒரே ஒரு நொடிதானே...
ஓராயிரம்..பூகம்பமும் சுனாமியும்..ஒன்றாய் வந்து
சின்னா பின்னமாய்..சிதைந்த மனதுடன்.. நான்!!

உன் சிரிப்பில்..
சிந்துவது முத்துகள் அல்ல...என் கவிதைகள்!
ஈர உதடுகள்..விலகி..முத்து பற்கள்
கண்ணுறும் போதெல்லாம்..
முத்தமிடும் எண்ணத்தை முந்துவதுஎன் கவிதைதான்..
மோகத்தில் விளைந்த கவிதையை..
"வாய் சொல் வீரன்" என பகடி செயிகிறாய்!

தமிழகமெங்கும்..பெய்த "வெப்பம் தூக்கி மழை"- தோற்றிருந்தது
முகனூலில் பொழிந்த என் நட்புகளின் வாழ்த்து மழையிடம்...!!

நாளை காலை இரத்தபரிசோதனை..
இத்துனை இனிப்புகளை உண்டபின்.."சர்க்கரை" வரமாலிருக்குமா???
அவளின் அன்பு முத்தங்கள்...

முருகப்பெருமான்..படத்துடன்..
அப்துல்கலாம் நகர் விளம்பரம்..
வாழும் ஒரே தேசிய தமிழன்!

No comments:

Post a Comment