
கை விரல்..பத்தும் மூலதனம்
கால்கள்..தேயும் கல்லறை வரை
உழைப்பாளிகள்.. கொண்டாடுகிறார்கள்..
"டாஸ்மாக்கில்" ..கவிழ்ந்துகிடந்து...
கூவி கூவி விற்று..
கை வண்டி பாரம் இழுத்து
கழுத்து வலிக்கும் பாரம் பலபிளாட்பாரம் கடந்து
இடிபடாமல் இந்நரகத்தில் வளைந்துவளைந்து ஓட்டி
போஸ்டர் ஒட்டி..சுத்தம் செய்து
சாயம் தோய்த்து...சட்டைகள் மடித்து
பல ஊசிகள் உடையும் ..
நிறுத்தாமல்..ஓடும் தையலெந்திரம்
வலி..வலி..வலி..
தீர்க்கும்..தீர்த்தம்...
காவிரியில்..இல்லை தண்ணி..
அனைத்து மாநில தண்ணியும் வருகிறது தமிழ் நாட்டிற்கு
காவிரியில் இல்லை.."டாஸ்மாக்கில்"
வற்றாத நதியாய்..வறியவனினுழைப்பை உறிஞ்சி..
கஜானாவில் பெய்யும் மழை..
கவிழ்ந்து கிடைக்கும்..உழைப்பாளிகள்..
வெறுப்பாய் பார்க்கிறேன்.. டாஸ்மாக்கினுள்
பர பரவென பாட்டில் உடைத்து ..தண்ணீர் பாக்கெட் கொடுத்து
சுடும் நெருப்பில்.. தோய்த்து எடுக்கும் நண்டு,மீன் ,எறா, சுறா
பட்டாசாய் டேபிள் துடைக்கும் 15 வயது சிறுவன்
இங்கும்..எங்கும் உழைப்பாளிகள்தான்..
மானியவிலையில் மது வழங்கலாம்தானே!!??
No comments:
Post a Comment