Tuesday, 31 May 2011

அலையாடும்....கடல்!!

அலை அடங்காத..கடல்..

நுரைத்து நுரைத்து பொங்கியும்..

கரை.. கரைக்கும்..அலை,,

அள்ள அள்ள மீனும்.. நண்டும்..

சிப்பியும்..பவளமும்..

வலை அறுக்கும் மீன்கள் அறும் அளவும் மீன்கள்..

அலையாடி கரைதலை வைத்து காற்றாடி..

மல்லாந்து நட்சத்ரம்பார்த்து நாள் பார்க்க..

கால் சட்டைகாலத்தில் கடல் பார்ப்பதே கனவு..

முழுகால் அணிந்த பின் தாவனிதான் கனவே

படிபபு கனவாய் போகாமல்..காப்பதேஒரு கனவாம்

தலையால் தண்ணி குடித்து..

தடுமாறி பள்ளிதாண்டி..பட்டம் படிக்கையிலே

பட்டத்தின் வால் போல நீண்டன ஆசைகள்..

பல பேப்பர்.. மீதம் இருந்தாலும்..ஒரு காதல் தேறீ

பின் கல்யாண ஆசையில் பட்டம் வாங்கி..

பல சுற்று பேசி..கனியவளை கரம்கோர்த்து

கண்ணாட்டி கண்ணாடி வளையணிய ஆசையாய்

கனவாம்..வாரிசும் வந்திருக்க

வாடகை வீடாம்..பெரும்கனவாய் குடும்பமும் ..

பொதிசுமக்க ..நானாய் கட்டிக்கொண்டேன் அரபு கயிறு,,

ஆசை ஆசையாய் 5 வருடத்தில் கட்டிவைத்து..

கால் வைக்க..கை கழுவி வந்தேன்..எம்பெரும் கனவு

சில மாதம் வீட்டில்துய்ந்து..பணிதேடி

மாதமிருமுறை..புணர்ந்து..தலையனையில் கார் கனவாய்

நல் பள்ளி கனவாக..

வேர்களின் உடல் நலம் ஒரு கனவாம்...

கனவுகள் சேர தொடங்க "எம்பெருங்கனவு" கரைய

கயிற்று விட்ட அரபு கயிறு அரை ஞான் கயிறாய் ஆகுதடா

அலை விட்ட கடலும் காணோம்..ஆசைவிட்ட மனசையும் காணோம்

அலையாடும் ..கடல்..ஆசையாடும் மனம்!!


No comments:

Post a Comment