எத்துனை உயிர்கள் உண்டு..
இவ்வுலகில்.. பிரிவேயில்லை
எம்மை போலே..
ஆண் சிங்கமுண்டு.. பெண்சிங்கமுண்டு..
அங்குஇல்லை சாதிசங்கம்
களிறுலிலும் உண்டு ஆணென பெண்னென
எப்போ வருவதுண்டு..உடற்குறையாய் இயற்கைபிழையாய்!
எம்மில் உண்டு பிழை..இயற்கையா...!!!???
படைத்தவன் உண்டா இலையா முதல் பிரிவு
உண்டில் உண்டு ஓராயிரம் பிரிவு
அதனில்முண்டு சாதியெணும் சதி
ஆறாமறிவு இருப்பதானல்.. உயர்வாம்
அதில் வந்ததிந்த சறுக்கல்
மொழியென்ற ஒன்று பிறக்காது போயின்
சத்தியமாய் இருக்கப்போவதில்லை...
இத்துனை சச்சரவும் சாவும்!
அந்த ஒன்றால் அழிந்திட்ட எம்மக்கள்..
அகப்பட்டும் ஆணவமாய் மனித மிருகம்..
அவனுக்கு முட்டுகொடுக்கும்..அசிங்கமான மனிதர்கள்
மனிதனை உண்ணும் மனிதர்கள்..
உலகின் உயிர்களில் உயர்ந்த படைப்பு!!!???
No comments:
Post a Comment