Wednesday, 31 August 2011

செங்கொடி..எனும் கன்னி தாய்

செங்கொடி..

அறிந்து வைத்த பெயரோ..

செம்மையம்மா நீ உயிர் ஈகையில்..

இவ்வகை மரணம் போற்றகூடியதல்ல..

ஆயினும் உனை ஆராதிக்கின் ..தமிழும் தலைகுனியும்

ஆறாம் வகுப்புதான்..அடங்கவில்லை

அறிவுப்பசி மக்கள் மன்றத்தில் தோழியாய்..

அண்ணாவை தந்த பெருமை .. காஞ்சிக்கு

இன்றும் தொடரும் நீ தடம் பதித்ததால்..

நீ இறந்ததால்சிறுமை இன்னாட்டிற்கே..

அதிகாரமே இல்லை என சொன்னவர்கள் ஆடிப்போனார்கள்..

தாயுள்ளம் எதுவென்று உணர்த்திவிட்டாய்..

வீரதாய் தமிழ் பெண்கள் கதையில்லை..செங்கொடியால்

ஓட்டுப்போடவே..வளையாத இளைய பாரதம்

பாடம் பயின்றது... போராட்ட குணம் எதுவென..

மேடையில்..இருக்கவேண்டி தலைமை தாங்க சொல்லியும்..

தள்ளி நின்று..இன்று தலைமகளாய்

உடனில்லாமல் ஒடி ஒளிந்தவனும்..

விருந்து கொடுத்தவனும்..

விமான தாமதத்தை பகன்றவனும்..

கூட்டனியிருந்தும்..இலாது போனவர்களும்..

நிராபராதியாய் வலம் வர..

என்னவென்று தெரியாமல்..

ஏன் என புரியாமல்..

பேட்டரி வாங்கியவனும்..

உதவியவனும்.. கொலைகாரனாய்..

இருளில்..நீதியும் குருடாய்..

விளக்கேற்றினாய்..நீயே வேள்வியாய்..

தீ புகுந்த சீதா..தெய்வமாம்..

தீ வைத்த கண்ணகி தெய்வமாம்..

நீயும் கன்னி தெய்வமம்மா..

செங்கொடி நீயும்.. கன்னி தெய்வமம்மா

இனி என் நாட்டில் கன்னி தெய்வமம்மா!!

No comments:

Post a Comment