எதுவென்று புரியாமல்..
என்னவென்று தெரியாமல்..
நிழல் போல் நீங்காத உன் நினைவுகள்தான் காதலா???
உறக்கம் வராமலே..
உறங்க போகிறேன்..
இமைகள் ஒட்டிகொண்ட பின்..
இதமாய் ஒட்டிகொள்ளும் உன் முகமதால்!
இரண்டு முள்ளும் இணைந்து..
சப்தமிட்டு கேட்கிறது ..உறங்கவில்லையா என
காலை காத்திருக்கும் பனிச்சுமையும்..
பகன்றது படுத்துறங்கு என..
ஏன் இமைகள் கூட ஏங்குகிறது ஒன்றினைய
தலைகோதும் உன் விரல்களையாவது அனுப்பிவையேன்!!
என் எழுத்தையும் திருடியது இன்றைய சிரிப்பு
உடன் சிரிப்பவன் இனுமொருவன்???
சொல்லிய வார்த்தைகளும் சரி..
சொல்லாத வார்த்தைகளும் சரி..
சொல்ல போவதேயில்லை சரியாய் என் காதலை!!
தொண்டையில்..சிக்கி வர தவிக்கும் வார்த்தை ..போல
கை விரலில் வெளிபடா..விந்தையாய் இன்று என் மனகவிதைகள்..
கவிதையாலே பேசிய காலங்கள்.. கவிதையே உன்னாலோ?
உனை தவிர ..வேறு சிந்திக்கா இயலா வழி...
நீ தந்திட்ட இந்த தோல்வியும் சுகம்தான்!!!
பிரிவொன்று சேரலாம்..என சொல்லி பிரிகையில்
அறிய வில்லை.. தண்டவாளத்திற்கு சேரவழியேயில்லை என்பதை
இன்றும் தொடரும் .. என் பயணம்..
ஒரு பக்கம் நானும் மறு பக்கம் உன் நினைவுமாய்..

:)
ReplyDelete