Thursday, 24 November 2011

விலைவாசி..

கனவுகளில் கழியும் இளமையில்..
மேலும் ஒரு நரையாய் விலையேற்றம்..
ஒரு இரவில் ஏறிய விலைவாசி அறியுமா???
சில வருடம் அதிகமாக்கிவிட்டதை - நம் வசந்தத்திற்கு

தங்கம் விலையேறுது தவிக்கும் தங்கை
அரை பவுனாவது போட வேண்டி..
ஆறு மாதமாய் பேரு வைக்காத அக்கா குழந்தை..
நான் விற்ற உன் நகை மறைப்பதற்காய்
தாய்வீடே போகா நீயும்
தள்ளி போட்ட குழந்தையும்
அறியாத அரசியல் வியாதிகளை என்ன செய்ய???

No comments:

Post a Comment