Friday, 7 January 2011

போகி..தீ

போகி..திரு நாள்..

பழையன கழிதலும்..புதியன புகுதலும்..

மக்கும் குப்பை..மக்கா குப்பை

வேறுபாடு பார்க்கா எரியும் தீ

நான் என்ன எரிப்பேன்..

அடிக்கடி அடுத்தவரை எரிக்கும் என் கோவத்தையா??

எதையும் செய்யா வேடிக்கை பார்க்கும் கையாலாகாதனத்தையா??

முன்னதை எரித்தால் பின்னவனாகி போவேன் முழுமையாய்..

பின்னதை எரித்தால்.. நான் தீ.. விரவாதி..

தீரா வியாதி அரசாங்கங்கள்..கொள்கைகள்

மக்கள் பணி செய்தால்..சிறைதண்டனை-''மாமனிதன் பினாய்க் சென்''

ஐந்து கொலை செய்துவிட்டும் சரணடைந்தால்..பொது மன்னிப்பு-நக்ஸலைட்

அந்த ஐந்துப் பேரில்..அரசியல் வியாதிகள் இருப்பின் கிடைக்குமா மன்னிப்பு??

இம்மென்றால் பின்னதை எரித்து ஆவேன் தீ!

யாரை அழிப்பேன்..?

என் இன கருவழித்தவனையா..

இல்லை உடன் இருந்தவனையா..

காட்டிக் கொடுத்தவனையா..

கூடி கூட்டமாய் கெடுத்தவனையா..

வாய்ப்பிருந்தும் தடுக்காதவனையா..

தவறு என்று தெரிந்தும் தட்டிக்கொடுத்தவனையா..

இலவசம் பெற்று ஓட்டிட்டு..இனப்பற்றை காட்டாத என் மக்களையேவா..

என்ன செய்வேன்..இப் போகிக்கு???

எதனை எரிப்பேன்..

ஒருவனுக்கு உணவில்லாவிட்டால் ஜெகத்தினை அழி என்றான் என் கவி

ஒரு கூட்டமே கையேந்தி நின்றும்.....

உள்ளொன்று வைத்து.புறமொன்று நடிக்கும் நடிகனை..

அருகில் தவறிருந்தும் கேட்கா என் அறிவுகோழைதனத்தை

வறியவர் மீது வரா அன்பை..

கொடியவர் மீது கொள்ளும் மரியாதையை..

எங்கிருந்தோ பொசுக்கென முழைக்கும் பொறாமையை..

வேண்டா காமத்தை..

உதவாத உள்ளத்தை..

போகியே எடுத்து போ..எரித்துபோ..

புதியன வேண்டாம்..

அதிகமில்லை 50 வருடம் முன்னிருந்த..

மனித மனங்களை தா..

என் மனிதர்களை தா.

No comments:

Post a Comment