சில வருடம் முன்பு.. எனது சகோதரி ஒருவருக்கு நான் எழுதிய கடிதம்..அவர்களின் குழந்தையை கண்டெடுத்ததை முன்னிட்டு!!
கை கால் முளைத்த சொர்க்கம்..
பொக்கை வாய் சந்தோசம்..
தவழ்ந்து வரும் கடவுள்..
தத்தி தடுமாறி நடக்கும் நந்தவனம்..
வெள்ளை சிரிப்பில் கொள்ளை கொள்ளும் தேவதை..
இனி உன்னிடத்தில்!
தாய்மை..
கர்ப்பம் தரிப்பதில் மலருவதல்ல..
மனம் மலருவதால் வருவது!
தாயிலா குழந்தைக்கு தாயாகி..போன ஆணும்..தாய்மை பேரடைந்தவனே!
அவள் சிரித்தாள்..யாழினி!
நடந்தாள்..நந்தினி!
அவள் என்றும்.. வளர்மதி!
விளங்குவாள்..நிறைமதியாய்!
கடவுள் உனக்களித்த.. அருள்மொழி!
இராகங்கள் ஒருங்கினைந்த.. இராகவி!
நாகரீகமாய்..நந்தனா!
இவள் புரிவாள்..நர்த்தனா!
உன் இன்பத்தின் .. வந்தனா!
தினம் நீ கூறும் சந்தியா வதனம்!
இவள் கூந்தல்.. கார்குழலி!
பூக்கள் விரும்பும்..பூங்குழலி!
நினைவுகளில்..நித்யா!
வித்தைகளில்..வித்யா!
உனை நோக்கி வந்தது..குழந்தையல்ல!!!
கடவுளின் நம்பிக்கை!
ஆம்
பிறக்கின்ற இடமும்..
வாழ்கின்ற இடமும் ..அவனது முடிவு!
No comments:
Post a Comment