Monday, 31 January 2011

பளிங்கி குண்டுகள் ..

வண்ண வண்ண குண்டு..

வழு வழுப்பான குண்டு..

பள்ளம் மேடு எல்லாம்...பார்க்காத குண்டு

பள பளப்பாய் இருப்பதாலே..பளிங்கி குண்டாம்!!

காருவாய் காசிலே..வாங்கி வாங்கி

கால் சட்டை பை நிறைய சேர்த்த குண்டாம்..

ஒவ்வொரு வண்ணமாய் தேடி..தேடி சொத்தாய் சேர்க்கையிலே

இவன் பளிங்கி வாங்கி அழிப்பான் சொத்தை என அய்யனை திட்ட வைத்த குண்டு

மோட்டா குண்டு தைரியத்தில்..

மோதி பார்ப்போம் வா என்பேன் பக்கம் வீட்டு அண்ணனிடம்

மோதிவிட்டு மோட்டா டாடா காட்டையிலே..

கனவெல்லாம் வலி சில்லுசில்லாய்

கைவிரல் கலையது..

கைகூடி வரவேயில்லே..

பக்கம் வீட்டு தம்பி எனை அழைத்து..மூனு குண்டு தோக்கையிலே

தோண்டி புதைத்தேன் பளிங்கியின் நினைவை

சில காலம் கழித்து..

கதிரவனோடு எழுந்து..

அவன் சுடும் முன்..சூடாய் போகும் அலுவல் வாழ்க்கையில்

பறந்து பறந்து பாய்கின்ற நேரத்தில்..சாலையோரத்தில்

வண்ண பளிங்கி வைத்து..

விரல் சுண்டி விளையாடும் இளைஞ கூட்டம் கான்கையில்

உழைக்க மறுக்கும் ஊதாறிபயல்கள்..என உதறும் வார்த்தைகளில்

தோற்ற குண்டுகளின் வலிகள்தான் அதிகம்!!!


No comments:

Post a Comment