அன்றைய தின பாதிப்பில் எழுதியது!! அஞ்சலியாய் இப்பொழுது!
ஏன் பூமாதேவி
பொறுமை இழந்துவிட்டாய்?
அகழ்வாரை தாங்கும் நிலமாயிற்றே
ஏன் இன்று அழ வைத்துவிட்டாய்?
என்ன செய்தோம் நாங்கள்..
ஏன் இப்படி எங்கள் சகோதரர்களை சாகடித்தாய்?
ஏன் இந்த கோரப்பசி..
கொத்தாய் பிஞ்சுகளை கொன்றுவிட்டாய்?
உனை தெய்வமாய் வணங்கும்.
எங்களுக்கு எப்படி எமனனாய்?
அன்னை பூமிதானே நீ..
குட்டிகளை உண்னும் சர்ப்பமானாயே??
தாயே உன் பசி தணிந்ததா?
போதும் இனி உனக்கு பசிக்காமலே போகட்டும்
இந்த உலகம் இறவாமல் இருக்கட்டும்..
இயற்கையாய் எங்கள் உடல் உனக்கு உணவாகட்டும்
அது வரை பசியாறாதிரு
மாதாவே உன் மடியில் தவழத்தான்..மனம் விரும்பும்
மடிவதற்கு இல்லை!
உனை நிந்தித்ததற்கு..மன்னித்துவிடு என்னை..
மீண்டும் கோபப்பட்டு எங்களை இம்சித்து விடாதே!!
No comments:
Post a Comment