நீ...,
பேசித் தீர்த்தப் பிறகும்
பிடித்திருந்தது
அந்த இரவு....,
இனி மீளுமா என்ற
கவலைகளை
ஒதுக்கிவிட்டு
காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்
ஒவ்வொரு இரவையும்...
------ ****------
உன்னை
நேசிக்க
ஏதாவது காரணம்
தேவையில்லை....,
உன்னைப் பற்றிய
நினைவுகளே போதும்...,
--------****------
என் வீணையின்
கம்பிகளிலிருந்து
வருகிறது
புல்லாங்குழல் இசை...,
சொல்ல மறந்த
வார்த்தைகளிலிருந்து
வருகிறது
காரணங்களுடனான
பதில்...,
எப்பொழுதும்
உதவும் கரங்களினின்று
விலகியே நிற்கும்
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களும்
ஒருவித உணர்வே...
-----*****-------
காலம்....,
தேடியெடுத்த
மூங்கிலில்
"காற்று"
துளையிட்டு வாசித்தது
உன் பெயரை....!!!!!
-----***-----
அதுவரைக்கும்
அவர்கள்
அழவில்லை...,
சிதறிக்கிடக்கும்
சிறு நம்பிக்கைகளை
வழி நெடுக
தேடியெடுத்த வண்ணமாய்
அவர்களின் பயணம்
நீண்டு கொண்டேயிருந்தது...,
சுவாசத்தின்
கடைசித்துளிகளில்தான்
உணர்ந்தார்கள்
நிராகரிப்பின் வலியை....,
இப்பொழுதுதான்
உறைந்த கண்களிலிருந்து
உதிரம் கசியத்துவங்கியது....,
கடல்நீர்
உவர்ப்பென சொல்பவனிடம்
காட்டுங்கள்
"ஈழம்"
எத்திசையில் இருக்கிறதென.....,
----*******---------
நான்...,
ராஜா கட்சி....!
நீ.....,
ராணி கட்சி....., என
பிரிந்து விளையாட
குழந்தைகள்
இருக்கிறார்கள்
அகதிகளாய்.....,
ராஜபக்சே நிலத்தில்......!!???
என் நண்பனின் கவிதைகள் இவை, வேளை பளு காரணமாய் அவன் அதிகம் முகப்புத்தகத்தில் உலவுவதில்லை! எனது பக்கத்தில் அவன் எழுதியதை தொகுத்திருக்கிறேன்!!
No comments:
Post a Comment