Friday, 4 February 2011

ஒரு திடீர் மழை..

இலையுதிர் காலம்..

இறுதி இலைகளையும் உதிர்த்துவிட்டு..

பாலைவனமாய் மரங்கள்!!

வறண்டு போன கற்பனையில்

பாலையாய் என் மனமும்!

நீர் தேடி வேர்கள்..

பூமியை துளைக்கும் சப்தம்

என் உள் மன இரைச்சல்களுக்கு நிகராய்!

கடவுளின் கருணையால்..

கார் காலத் தொடக்கம்!

மெல்ல உருமாற்ற கொள்ளும் மன்மத மரங்கள்!

ஓயாத உள் மன இரைச்சலால் சூடாகிபோன

என் மீது ஜன்னலின் வழி

ஒரு மழைதுளி!

மறந்துவிட்ட கலைக்கு..

உயிர் நீராய்...!

என் ஜன்னலின் வழி..

மரங்களின் மாற்றங்கள் என்னுள்ளும்!

மெல்ல புன்னகைக்க தொடங்கியது.. என் மனமது!

என் ஜன்னலின் வழி..

தெரித்தது மின்னலின் ஒளி!

இமைக்க மறுத்தன இமைகள்..

எதிர் ஜன்னலில் பௌர்ணமி நிலா!!

வெளி நீட்டிய..

அவள் மலர் கரங்களை..

காதலாய் முத்தமிட்டது மழைதுளிகள்!

பொசுக்க முயன்றேன் அவைகளை..

என் பொறாமை தீ கொண்டு!!

ஜன்னல் நிலவு மறைந்து விட்டது

மழைக்கால வான வில்லாய்!

சாரல் அடித்தும் மூட மறுத்தேன்

என் ஜன்னல் கதவுகளை

இரவு கண்ட கமலமாய்

சுருங்கியது என் மனம்

வெற்றிட ஜன்னலால்

கதிரவன் கண்ட காந்தியாய்

என் கண்கள் மொட்டை மாடியில்!

அமிர்த மயக்கத்தில் அனுப்பினான்...

போலும்- மதுவுண்டவனாய் நான்!

என் ஜன்னலும் அடைப்பட்டது..

மொட்டை மாடியில் நான்!

குளிர் மழையிலும் என்னுள்

தகிப்பு..!

அவளை முழுவதும் அணைக்கும்..

மழைதுளிகளால்!!!

வருணன் ஏன் மண்ணிற்கு வந்தான்

அறிந்து கொண்டேன்...!

ஆணந்த நர்த்தணம்

பதில் பரிசாய் வருணனுக்கு!

இடிச்சத்தங்கள்... மழை இரைச்சல்கள்

இல்லாத அமைதி உள்ளே!

அவளுருவம் நோக்குவதே

தவமாய் இமைக்காத இமைகளோடு!

வருணனுக்கு போட்டியாய்.. வந்தான் வாயு

அவள் கூந்தலும்..

மயில் தோகையாய் ..மாறியதேன்??

வருணனும் வாயுவும்..

அவளோடு உறவாட

அக்னி மட்டும்..என்னோடு!

பரதம் அவள் அறிந்திருக்கலாம்..

சந்தங்கள் நான் அறிந்தவனில்லை

ஆனாலும் உதடுகள் உயிர்பித்து கொண்டிருந்தன....

கார்குழலில் ஒரு கற்றை

ஒரு கன்னம் மறைத்திருக்க

ரவி வர்மனும் எழுத இயலா

எழில் தோற்றம் அது!!

அழகான பெண்கள்தான்..

கவிஞனின் ஆகாரம்..

என் விழி வழி வழியும் மழை நீரும்

மறைக்க வில்லை அவள் முகம்!!

மழை நின்றது..

நீர் விழும் சப்தம்..

அவள் கூந்தல் வழியாய் வழியும்

நீர் சொட்டுகள்..

நேராய் என் இதயத்தில்!!

கூந்தலை சழற்றி திரும்பியவள்..

தொட்டாசிணுங்கியாய்..சுருங்கி போனாள்

என்னுருவம் கண்டு!!

மயில் தன் தோகையடக்கி..

கூட்டுக்குள் அடைந்து விட்டது!

என் துணிகளின் ஈரம் உலர்ந்த பின்னும்

அதே இடத்தில் நான்!

ஜன்னல் அடைப்பதை ...

மறந்து போனேன்..

மழையையும்..அந்த மயிலையும் எதிர்னோக்கி!!!??


No comments:

Post a Comment