மனைவியின் கைவண்ணம்..
கோலமாய்..எனை வரைவாயா என்றேன்..
துதிக்கை நீக்கி விட்டால் நீங்கள்தான் என்றாள்??!!!
சிரிக்க எழுதிவிட்டாலும்..
சிந்திக்கிறேன்..பல நாளாய்
அவளை பாராட்டவேயில்லை என்பதே!!
தவறெனும் போது வினாடியில் வெடிக்கும் நான்
இத்துனை நாள் தவறியிருந்தேன்..
அவளிடம் மட்டுமல்ல
செல்ல மகனையும் மறந்திருந்தேன்..
பணி என்பதா மனதின் பிணி என்பதா??
எதை..பெறுகிறேன்.. இதை கொடுத்து???
சின்ன சின்ன சந்தோசம் மறந்த நிலை
பணியும் பணமும் தவமாய்..
ஒரு வகையில் பாதி துறவிதான் நாமும்!!
No comments:
Post a Comment