Wednesday, 21 November 2012

அவளொடு நட்பிய நாட்கள்..


ஏனோ...
சுடுகிறது இம்மழை என்றேன்

விலகியிருந்த விரல் கோர்த்து
இனி குளிரும் என்றாய்

சுடாத தீ என்றேன்..
ஈர இதழ் ஒற்றி சுட்டதா என்றாய்

மூச்சு காற்றே இல்லை என்றேன்..
உன் மூச்சை எனதாக்கி சரியா என்றாய்

உறுத்துகின்ற புற்கள் என்றேன்..
மடிதந்து பஞ்சுமெத்தை என்றாய்

முதுகில் பாரமென்றேன்
இறுக்கி கொண்டு இலகியதாயென்றாய்

தொடும் தூரத்தில் இரு நிலவென்றேன்..
வெட்கத்துடனே நீ ஆர்ம்ஸ்ட்ராங்கென்றாய்

விளையாட்டாய் நீ வேண்டாமென்றேன்..
நீயும் அதையே வேண்டுமென்றாய் 

விளையாடதே என்றேன்
விளையாட்டில்லை என்றாய்

மிகு வலி யென உரைத்தேன்..
வேறு வழி இல்லை என்றாய்

வாழ் நாள் துன்பமென்றேன்
சில நாட்கள்தானென்றாய்

கண்ணீர் விடையென்றேன்..
சிரித்த முகம் போதுமென்றாய்

தனியாக பேசிக்கொண்டேயிருக்கிறேன்..

பதிலுரைக்க வருவாயா???

No comments:

Post a Comment