Saturday, 30 August 2014

புலம்பல்...

புன்னகைக்கு பின்..புகைகிற மனமிருத்தலை
கண்டு..கண்டு சோர்வுற்றுள்ளேன்
ஒரு வகையில் நானும் அவர்களை போல்
பொய்யாய் சிரித்து.. பேசுவதால்
என் உணவை யாரும் திருடவில்லை..
என்று இறுமாந்திருக்கிறேனா??? ஏமாந்து இருக்கிறேனா???
பொறாமை தீ...
கொண்டவனையே... மூச்சிடைய வைக்கிறது
ஏறிகொண்டுதான் இருக்கிறேன்..
உயரம் வரவேயில்லை..
சறுக்க வைத்த மனதுகளுக்கு நன்றி!?
எதிரில் இருப்பவர் எல்லாம் எதிரிகளா..?
இல்லை..
எதிர்ப்பவர்கள்..எல்லாம் எதிரிகளா???
குழப்பத்திலே.. உலகம்!!???
எனக்கு..பிடிக்காத மனிதர்கள் பலருண்டு...
ஆனால்
எதிரியென்று எவருமிலை..
என்னை.. "நான்" தின்று விழுங்கும் போது
எதிரியென்று சொல்ல எவருமில்லை..!!
என் தோல்விகள் அனைத்தும் வெற்றிகள்தான்..
சிலர் அதை முயலாமல் இருப்பதாலே!!
பலரின் வெற்றிகள்.. என் தோல்விகளே
நான் அதை முயலாமல் இருப்பதாலே
இங்கு வெற்றியாளன் என்று எவருமில்லை..
தோற்று போனவனும் யாருமில்லை???
இரவில் உறங்கி... விழிப்பதே
உறக்கத்தை வெல்வதே..
காலம் ஒரு காட்டாறு..
நீர் வரும் போது வேகம்..
இல்லையெனில் வற்றல்
வற்றி வற்றி வாழ்வதுதான் மனித விதி..
இதில் மனிதம் மறப்பதா நியதி??
மனமே..
காட்டாற்றில் நீர் வரும் ...
உன் வியர்வை வெற்றி தரும்!!

No comments:

Post a Comment