Saturday, 7 August 2010

மரிக்கட்டும்..தமிழ்

கனவுகள் கலைந்தனவா..
மேகங்கள் மழை பொழிய மறுத்தனவா..
சூரியன் உதிக்க மறுக்கிறதா..
வெம்மையாய் மாறியதா இரவுகள்..
கசக்கின்றனவா கரும்புகள்..
குருதி காயாத மண்ணில்..குருத்துககள் இனி வருமோ
இழப்புகள் கண்ட பூமி..இனி இனிப்புகள் கானுமோ
மயான அமைதி கொண்ட மண்..இனி மன அமைதி கொள்ளுமோ
அழகான காதல் பூக்குமா..குருதி வாசமில்லா கவிதை வருமா
ஓ..இறைவா..அழிதொழிக்கும் உன் தொழில் பசி அடங்கியாதா..
சிதறிய கண்மணிகளில்..கலையாத கனவு காண்..
உன் மரணக் கயிறில் சிக்காதவர்களுக்கு..சிரிப்பை தா..
வருடம் முடிந்தும்..வயிற்றில் பசி அரக்கன்..
எங்கோ கையில் காப்பி கோப்பையோடு.."முடிவல்ல தொடரும் என்றான்"
சொந்த பூமியில் நீர் குடிக்க அனுமதி வேண்டி..
எம் மொழிக்கு என்று கடவுளை வைத்தோம்..மொழியை கடவுளாய் துதித்தோம்..
அழிக்கும் தொழில் மட்டும் அழகாய் செய்தாய்..
ஆடுகளாய் இருப்போம்..இரப்பொம்..இறப்போம்..
அடிமையாய் ஒரு கூட்டம் படைத்திட்டாய் அதை அழித்திட எமையழித்தாய்
ஒரு நொடியில் மாறாதா இன்னிலை..
என் மீதகூட்டம் மரிக்கும் முன் ..மரிக்கட்டும் என் உயிர் தமிழ்!
வாழட்டும் ஒரு கூட்டம் வலியற்று

No comments:

Post a Comment