Sunday, 15 August 2010

என் காதற் கரு

பத்து மாதம் கடந்தும்..

பல நாளாய்..

பிரசவிக்காத கரு...

நான் கொண்ட காதல்!

கடைசி இருமாதங்கள்..

முட்டி உதைத்து..

வலி தரும்..பெண்ணின்

வயிற்றுக்கரு..

உனை நெஞ்சில்..

நினைத்த நாள் முதலாய்..

ஒரு கணம் கூட குறையாத..

நெஞ்சு வலியாய்...என் இதயக்கரு!

உன் நினைவுகளால்..

நெக்குருகி....

தானாய் வழியும் ..."கண்ணீர்"

ஏன் எனும் கேள்விகளுக்கு

விடையளிக்க திணருகிறேன்..

சொல்லா சோகம்...

சுகம் என்ற போதும்...

தானாய் வழியும் கண்ணீர்...

தூக்கம் துறந்த விழிகள்..

சவரம் மறந்த முகம் என..

மற்றவர்களுக்கு சொல்லி விடுகிறது..

நானொரு காதல் "கர்ப்பஸ்திரன்" என்று!!

பிரசவித்த உடன் ..இறக்கும்

சிசுவாககுமோ.."என் காதல்"

என பயமுற்று..பிரசவிக்க மறுக்கிறேன்!!

பிரசவிக்க மறுக்கும்/மரிக்கும் கருவினை..

சிசேரியன் செய்வார்கள் பெண்களுக்கு..

"என் காதலுக்கு"..????

நீ மறுத்தாலே...

மரித்ததாகி விடும் என் காதல் கரு..

அதனின் பெயர் சிசேரியன் அல்ல அது என் "போஸ்ட் மார்ட்டம்"

பிரசவிக்கவா..காத்திருக்கவா???


No comments:

Post a Comment