Friday, 13 August 2010

கடல்..

கரை மீது என்ன.. மோகம்..

இந்த அலைகளுக்கு..ஓயாமல் வருகிறதே!

எதனை எட்டிப்பிடிக்க..

இத்துனை படையெடுப்பு..!

ஓய்வு தேவையில்லையா..உனக்கு?

உன்னிடத்தில் ஓய்வெடுக்க..

எத்துனை சோம்பேறி..மனிதர்கள்!!

எத்துனை காலடித் தடங்கள்..

உனை காண வந்தவர்களால்...!!

அது என்ன..உன்னிடத்தில் மட்டும்.....

சோகத்தை தணிக்க

இன்பத்தை கொண்டாட

காதல் செய்ய

ஓய்வு எடுக்க

விடுமுறை கழிக்க

இரகசியமாய் சந்திக்க

இப்படி அத்துனை செயலுக்கும்..

உன்னிடத்தில் என்ன மோகம்!!!??

ஏதோ உன்னிடத்தில்???!!!

No comments:

Post a Comment