என் அறைக்கு வந்திருந்தார்..
எனை அறிய விரும்பி..
நான் வாசிக்கும் புத்தகங்களை கண் நோக்கினார்!
பார்வையிட்டுக்கொண்டே..
பாரதி விருப்பமா என்றார்..?
மிகுந்த பற்று என்று..பவ்யமாய் பதிலளித்தேன்!
விவேகானந்தரை..
அறிந்துள்ளாய் போல என்றார்...?
அறிய முயல்கிறேன் என அடக்கமாய் கூறினேன்..!
என் கவிதைகளை..கண்டுணர்ந்து..
கவிஞனோ என்றார்...?
முன் ஜென்மம்..கம்பனின் கைதடி யான் என கர்வமாய் பகன்றேன்!
என் குணமறிந்தீரா..இம்முறை நான் வினவ..??
சொல்லில்...நேர்மை..
உள்ளத்தில்..தூய்மை...
நெறிமுறை ..வாழ்க்கை..இவையே..உன் குணம் என்றார்!
என் உள்ளம்..
உவகை கொள்ளவில்லை..உறுத்த தொடங்கியது.......
நல்லவேளை..
என் நாட்குறிப்பேட்டை அவர் பார்க்கவில்லை?
பார்த்திருந்தால்.....
மனதளவில்..
என் கற்பு கறைபட்டதை கண்டிருப்பார்..
கனவுகளில்..
கன்னிகளின் கற்பை நான் களவாடுவது கண்டு அதிர்ந்திருப்பார்..
ஒழுக்கத்தின் எல்லைகோட்டை..
ஒவ்வொரு நாளும் தாண்ட முயற்சிப்பதையறிந்து தவித்திருப்பர்...
பாரதியை பார்க்கும் கண்கள்..
ஷகிலாவை காண்பது கண்டு சினந்திருப்பார்...
முரண்பாடுகளில்..
மூழ்கி கொண்டிருக்கும் எனை மீட்க முயற்சித்திருப்பார்..
என் அக அழுக்கை..
அகற்ற அறிவுரை வழங்கியிருப்பார்..
என எண்ணி..
பல நாள்...வெட்கிதலைகுனிந்திரு
இன்று அதற்காய் சினந்தேன் எனையே??
அவரை..
அடுத்த வரிசையில்..
அந்தப் பட திரையரங்கில் பார்த்த பொழுது!!
அவரும் சராசரி மனிதர்தானோ!!!
CLICK THE LINK AND READ
ReplyDeleteமதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.
...............