Sunday, 15 August 2010

என் இளைஞன்...என் இளைய பாரதம்..

எதிர் கால இந்தியா..

இளைஞர்களின் கையில்!!!

புகையும் சிகரெட்டை காணதவர்கள் சொன்னது!

தண்ணியடிப்பது தவிர்க்க முடியாதது..

ஆகி விட்டது என் இளைஞனுக்கு......

தள்ளாடுவது எந்தன் தாயகமும்!!!

தேர்தல்..படித்தவனுக்கு

ஒரு மணி நேர வேலை..மீத நாள் விடுமுறை!!

பாமரனுக்கு..

பட்டினி கிடப்பினும் அவன் கட்சி தேறனும்!!!

பள்ளியில தேறாத கேஸ்ல்லாம் சட்டம் இயற்றும் இடத்தில்!!

சினிமாவில் கொஞ்சம்..

சின்ன திரையில் கொஞ்சம்..

கிரிக்கெட்டில் கொஞ்சம்..

கெட்ட வெப்சைட்டில் கொஞ்சம்..

முக நூலில் மிச்சம்..தொலைத்தோம் எங்கள் நாட்களை..!!

சகிப்பு தன்மை வளர்ந்து விட்டது...

சாக்கடையெல்லாம் தலைவனாய்...

வீரமான இளைஞன் எல்லாம்..

அவனது கைதடியாய்..ரவுடியாய்..!

விதி மீறலை..விதியாய்

மதி மறந்து சூல் நிலை கைதியாய்

வாழும் இளைய பாரதம்...

வாழ்க சுதந்திரம்!!!

No comments:

Post a Comment