Friday, 23 July 2010

ஒரு ஊமை காதல்...

எனை நீ கடக்கையில்...
கண்ணதாசனை; வைரமுத்து.- வார்த்தைகளை..
உயிரில் நிரப்பி..உயிர்ப்பித்தேன்..!

நடு இரவில் விழித்து...
கிறுக்கிய என் உளறல்களை...
பேருந்தில்..உன் காதருகில் தினமும்!

நேருக்கு நேர்...
இமைகள் படபடப்பில்..
இதயதுடிப்பில் தடுமாற்றம்!

விரலசைப்பிற்கும்..
உதடு முறுவலிப்பிற்காகவும்..
டிக்கெட் கடத்தும் வரிசையில்...உன்னருகில்!

ஒவ்வொரு முறையும்..
என் கவிதைக்கு ..பரிசாய்
சிறு பார்வை..புன்முறுவல்..!

வருடம்..கடந்தன..
என் விரல்களும் வலித்தன...
காதருகே துணிந்து சொன்னேன்...
-மூன்று வார்தையை...

அதே தலை அசைவு..
சிறு முறுவல்..
என் தூக்கம் தொலைந்ததடி!

உன் பேருந்து நிறுத்ததில்..
காத்திருந்து அழைத்தேன்..
திரும்ப வில்லை..காத்திருந்தேன்..
நீ வருகையில்..மீண்டும் அழைத்தேன்..
திரும்பவில்லை..!!!?

உன் தோழி திரும்பினாள்..
உரைத்தாள்..
காதும்..உதடும்..ஊமையாய்...என் காதலும்!

No comments:

Post a Comment