காலம் ஒரு குரு..
அனுபவங்கள் அதன் வழியில் பாடமாய்..
கற்க மறுதலித்த ..
முட்டாள் மாணவனாய்...மனம்!!?
இராஜ வாசம்..சில தினம்..
அஞ்ஞான வாசம்.. சில தினம்..
அமைதியாய்..புன்னகையாய்..ஓரிரு நாள்..
கோபமாய்..கொந்தளிப்பாய்..தினம்..
மாலை..மரியாதை...
புறக்கனிப்பு...அவமானம்...
பொறுப்புகளும்...பதவியும்...
வெறும் பலமற்ற பார்வையாளனாய் மட்டும்..
ஊதியமற்ற.... உழைப்பு....
உழைப்பற்ற .. ஊதியம்...
பணிவுடன்.. ஞான செறுக்கு...
பணிவு மறந்த கிறுக்கு....
பயமற்ற.. வீரம்...
வீரமிழந்த ...பயம்..
நிரந்தரமற்று..இருப்பதே...
நிரந்தரமாய்..
மாற்றங்கள்... மட்டுமே..
மாற்றமில்லாமல்..
சூரியன்.. நிலவும்..
வானில்.. நிரந்தரம்..
கண்ணில் தெரியும் மாற்றம்..
வளர் பிறை..தேய்பிறை..
முழு நிலவு..நிலவற்ற வானம்..!!
விடியல்..முற்பகல்..
நண்பகல்..அஸ்தமனம்..!!
விதையில் தொடங்கி...
விதைகளாய்..மாறும் வரை..
மாற்றங்கள்..மரத்திலும்...!!
மணிமகுடம்..தரித்த..உண்மை..
மகனை அறியாத...வெட்டியானாய்...அதே உண்மை....!!
அஸ்தினாபுரத்து..ஆண்மை..
ஆண்மையற்ற..பேடியாய்..ஒரு வருடம்..!!
மனமே..
காலம் நிற்பதில்லை..
ஓடிக்கொண்டேயிரு..
நாளை...
நன்மையே..இலக்கு..
இன்று...
எது நடப்பினும்...பாடம்...
நேற்று..
புலம்பியதை..புறம் தள்ளு...
தேடிப்பார்..ஏதோ ஓர் படிப்பினையை..
கை பிரம்பு...
பார்வையற்றவரின் பலம்..
அனுபவம்...
மனிதர்களுக்கு..!!
காலமே..குருவாய்..
அனுபவமே பாடமாய்..
மனமே..மாறுவாய்..சீடனாய்..!!!!
காலம் பொன் போன்றது (பழமொழி)
ReplyDeleteகாலம் உயிரிலும் மேலானது
அது தான்
திரும்ப பெறமுடியாதது
உனது காலமே உன் வாழ்க்கை..,
காலம் தொலைந்தால் வாழ்க்கை
தொலைந்துவிடும்